No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை கிருஷ்ணனின் புகழை சொல்லக்கூடிய கோகுலாஷ்டமி!!

Aug 30, 2018   Ananthi   522    ஆன்மிகம் 

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராணக்கதை உண்டு. அதுபோலவே கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. கோகுலாஷ்டமி குழந்தை கிருஷ்ணனின் புகழை சொல்லக்கூடியது.

🌟 தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவர் கிருஷ்ணபரமாத்மா. அவர் பிறந்த புண்ணிய தினமே கோகுலாஷ்டமி தினமாகும். கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தார்.

🌟 ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் கோகுலாஷ்டமி வருகிறது. கிருஷ்ணர் அஷ்டமி திதியன்று நள்ளிரவில் பிறந்ததால் - என்று அஷ்டமி நள்ளிரவில் வருகிறதோ அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமியும் சேர்ந்து வந்தால் அது இரட்டிப்பு சந்தோஷத்தை தரும்.

🌟 கோகுலாஷ்டமி நாளன்று வீட்டின் வாசலிலிருந்து பூஜை அறை வரை அரிசி மாவை நீரில் கரைத்து அந்த மாவைக் கொண்டு சிறு குழந்தையின் காலை வரைவதற்கு குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவதாகப் பொருள்.

🌟 கோகுலாஷ்டமி தினத்தன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

🌟 அன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது.

🌟 அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோசித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதையை பின்பற்றுவதே இப்பண்டிகையின் தத்துவம்.

🌟 கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தைக் கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று, வாழ்வில் வளம் பெறுவோம்!


Share this valuable content with your friends


Tags

4ல் சந்திரன் இருந்தால் january 6 எம்பெருமான் காட்சி அளித்தல் புரட்டாசி மாதத்தில் பெண் பார்க்க செல்லலாமா? சுயநல எண்ணம் மிகுந்தவர்கள் இவர்களே! குழந்தை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா? வார ராசிபலன்கள் (13.05.2019 - 19.05.2019) PDF வடிவில் !! குருபகவான் வீட்டின் உட்பகுதியில் எந்தெந்த பகுதியில் சமையலறை வரவேண்டும்? திருநள்ளாறு சனீஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடலாமா? kuru நல்லெண்ணெய் 5ல் சனி இருந்தால் புத்திர பாக்கியம் உண்டா? சொந்த வீடு பூஜை நேரம் பச்சை நிற பட்டு வாங்கி அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (25.06.2020) raasi யானை மீது அமர்ந்து செல்வது போல்