No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவகிரகங்கள் நமக்குள் இருக்கின்றன... எப்படி தெரியுமா?

Aug 30, 2018   Ananthi   2167    ஆன்மிகம் 

👉 ஜாதகத்தில் உள்ள பனிரெண்டு கட்டங்கள் எவ்விதம் அவரவர் உடல் உறுப்புகளை குறிக்கின்றதோ அதேப்போன்று கிரகங்களும் நமது உடலிலுள்ள அங்கங்களின் வளர்ச்சிக்கும் இன்றியமையாததாக இருக்கின்றன.

👉 ஆறாம் இடத்தோடு தொடர்பு பெற்றுள்ள கிரகத்தின் திசா, புத்தி மற்றும் அந்தரம் ஆகிய காலங்களில் இன்னல்கள் உண்டாகும்.

👉 நவகிரகங்கள் யாவும் நமது உடலில் அடங்கியுள்ளன. அவை எவ்விதம் தமது உடலில் இடம் பெற்று இருக்கின்றன என்பதனை பற்றி காண்போம்.

நவகிரகங்களும், உடற்பாகங்களும் :

👉 சூரியன் - வலது கண், எலும்பு

👉 சந்திரன் - இடது கண், மார்பகம், சிறுநீரகம், வயிறு

👉 செவ்வாய் - இருதயம்

👉 புதன் - கைகள், கழுத்து, தோள்பட்டை, தொண்டை

👉 குரு - மூளை, தொடை, பாதம், மூக்கு, கொழுப்பு

👉 சுக்கிரன் - முகம், கருப்பை, பெண்ணின் கரு முட்டை, ஆணின் விந்தணுக்கள்

👉 சனி - பிருஷ்டம், மூட்டு, முழங்கால்

👉 ராகு - குடல், மலக்குடல், காது, தலை

👉 கேது - நகம், முடி, ஆசனவாய், மர்ம உறுப்பு

👉 மேற்கூறியவாறு கிரகங்கள் தங்களின்

ஆதிபத்தியத்தினை எவ்விதம் கொண்டுள்ளன என்பதை அறிந்தோம்.

👉 இனி கிரகங்களின் முக்கிய ஆதிபத்திய (சூட்சம உறுப்பினை) பெறும் உறுப்புகள் பற்றி நாம் காண்போம்.

நவகிரகங்களும், சூட்சம உடற்பாகங்களும் :

👉 சூரியன் - எலும்பு

👉 சந்திரன் - ரத்தம்

👉 செவ்வாய் - எலும்பு மஞ்ஞை, சிவப்பணுக்கள்

👉 புதன் - தோல்

👉 குரு - சதை, கொழுப்பு

👉 சுக்கிரன் - விந்து

👉 சனி - ஜீரண உறுப்பு

👉 ராகு - குடல்

👉 கேது - நரம்பு

👉 இவ்விதம் கிரகங்கள் தங்கள் திசா, புத்தி மற்றும் அந்தரம் போன்றவற்றில் நமது உடல் உறுப்புகளில் ஆதிபத்தியம் பெற்றுள்ள உடல் பாகங்கள் மூலம் நமது வினையின் பயனை செய்ய தொடங்குகின்றன.


Share this valuable content with your friends