No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 30, 2018   Ananthi   648    நவ கிரகங்கள் 

🌟 மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் குரு சமம் என்ற நிலையில் இருந்தாலும் அவர் நீச்சம் பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்வது என்றால் மிகவும் கடினம்.

🌟 பிடிவாத குணமும், எவரிடமும் அடங்கி போகாத குணமும் இருக்கும்.

🌟 எப்போதும் தங்களை உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 தாங்கள் சொல்வதை அனைவரும் கேட்டு நடக்க வேண்டும் என எண்ணுபவர்கள்.

🌟 காலம் கடந்து எதையும் செய்வதால் நல்ல வாய்ப்புகளை இழந்து விடுவார்கள்.

🌟 எதிலும் நம்பிக்கையின்மையும், சந்தேகத்தையும் கொண்டவர்கள்.

🌟 வீண் செலவுகளை செய்வதில் வல்லவர்கள்.

🌟 குறைவான உறவுகள் மற்றும் நண்பர்களை உடையவர்கள்.

🌟 கற்பனையில் காலத்தை கடத்துவதில் மன்னர்கள்.

🌟 எதையும் துணிந்து செய்வதில் இவர்கள் ஈடுபடமாட்டார்கள். ஆனால், மற்றவர்கள் செய்யும் செயலில் உள்ள குறைகளை அறிவதில் வல்லவர்கள்.

🌟 எப்போதும் நிதானமாகவே இருப்பார்கள். மனதில் ஒரு விதமான கவலையுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 காது சம்பந்தமான பிரச்சனைகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.

🌟 உணவு விஷயங்களில் நல்ல சுவையறிந்து உண்ணக் கூடியவர்கள்.

🌟 நல்ல நித்திரை சுகம் உடையவர்கள்.

🌟 பெருந்தன்மையான எண்ணங்கள் இல்லாமல் குறுகிய எண்ணத்தை உடையவர்கள்.

🌟 அதீத கற்பனை திறனும், பிடிவாதமும் இவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைகின்றது.

🌟 ஆரோக்கிய சம்பந்தமான பிரச்சனைகளை உடையவர்கள்.


Share this valuable content with your friends