No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிகள் !!

Aug 30, 2018   Ananthi   483    வாஸ்து 

🏠 வாஸ்துவில் அனுபவப்பட்ட விஷயங்களையும், கண்டு உணர்ந்த விஷயங்களையும், அடிப்படை விதிகளையும் எல்லோருக்கும் பயன்படும் விதமாக அமைத்துள்ளோம்.

1. நீங்கள் வாங்கக்கூடிய இடம் காலி மனையோ அல்லது வீடு, எதுவானாலும் சதுரமாகவும், செவ்வகமாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.

2. காலி மனையை பொறுத்தவரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு சற்று தாழ்வாக இருக்க வேண்டும்.

3. வீட்டின் உள்ளமைப்பை பொறுத்தவரை வடகிழக்கு வரவேற்பறையாகவும், தென்கிழக்கு சமையலறையாகவும், தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூமாகவும், வடமேற்கு கழிவறையாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

4. பூஜையறையை பொறுத்தவரை தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு நடுப்பகுதி இந்த பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாம்.

5. கழிவறையை பொருத்தவரை வீட்டின் மேற்கு நடுப்பகுதி, வீட்டின் வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ளலாம்.

6. கழிவறை வீட்டின் மொத்த அமைப்பில் வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும்.

7. மாடிப்படியை பொறுத்தவரை வீட்டின் உட்பகுதியில், தெற்கு நடுப்பகுதி, மேற்கு நடுப்பகுதியில் மட்டும் வரவேண்டும். வெளிப்புறத்தில் தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய மூன்று பகுதியிலும் திறந்தவெளி முறையில் வரவேண்டும்.

8. வீட்டிற்கு நான்கு புறமும் காம்பவுண்ட் மிக மிக அவசியம். தெற்கு பகுதியும், மேற்கு பகுதியும் குறைவான இடைவெளியில் காம்பவுண்ட் வரவேண்டும். வடக்கு பகுதியும், கிழக்கு பகுதியும் நிறைய இடைவெளியில் காம்பவுண்ட் வரவேண்டும்.

9. போர், கிணறு, தரைக்குகீழ் தண்ணீர் தொட்டி போன்றவைகள் வடகிழக்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும். தரைக்கு மேல் தண்ணீர் தொட்டி அமைப்பு என்பது வீட்டின் மொத்த அமைப்பின் தென்மேற்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும்.

10. கார் செட் அமைப்பானது வீட்டின் தென்கிழக்கு பகுதியிலும், வடமேற்கு பகுதியிலும் எந்த ஒரு மூலையிலும் மூடாமல் வரவேண்டும்.

11. போர்டிக்கோ பொருத்தவரை வீட்டின் நான்கு பகுதிகளும் அமைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு மூலையில் கட் ஆகாமல் அமைத்துக்கொள்ள வேண்டும். வீட்டின் மேற்கூரை அளவில் சமதளமாக அமைத்துக்கொள்ள வேண்டும்

12. வீட்டின் உட்பகுதியில் தரை தளம், வீட்டின் மேற்கூரையில் தளமும் இரண்டும் சமமாக இருக்க வேண்டும்


🏠 இந்த அடிப்படை விதிகளை ஒரு கட்டிடத்தில் மீறும் பட்சத்தில் கூடுதலான விளைவுகளையே ஏற்படுத்தும்.


Share this valuable content with your friends