No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை மாலை சுற்றி பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாதா?

Aug 26, 2020   Ananthi   429    ஜோதிடர் பதில்கள் 

1. சிவலிங்கத்தை தொட்டு வணங்குதல் சரியா? தவறா?

🌟 சிவலிங்கத்தை தொட்டு வணங்குதல் சரியன்று.

2. லக்னத்தில் செவ்வாய் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 முன்கோபம் கொண்டவர்கள்.

🌟 பல விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 எதிலும் பற்றற்று செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஆவணி மாதத்தில் புது வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 ஆவணி மாதத்தில் புது வீட்டிற்கு குடிப்போகலாம்.

4. குழந்தை மாலை சுற்றி பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாதா?

🌟 குழந்தை மாலை சுற்றி பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது.

🌟 மாலை சுற்றி பிறந்த குழந்தையின் முகத்தை முதலில் பார்க்கும்போது நேரடியாக பார்க்காமல், எண்ணெயின் மூலம் தெரியும் குழந்தையின் உருவத்தை பார்ப்பது சிறந்த பரிகாரமாகும்.

5. காதலர்களை பிரித்து மற்றவருக்கு திருமணம் செய்து வைப்பவர்களுக்கு எந்த பாவங்களின் வகைக்கு உள்ளாவார்கள்?

🌟 தவறான எண்ணம் கொண்டு காதலர்களை பிரித்து மற்றவருக்கு திருமணம் செய்து வைப்பவர்களுக்கு இல்வாழ்க்கை அமைவது தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

6. ஒரே ராசி, நட்சத்திரம் மற்றும் லக்னம் இருப்பவர்கள் ஒரே வீட்டில் இருந்தால் நல்லதா, கெட்டதா?

🌟 ஒரே ராசி, நட்சத்திரம் மற்றும் லக்னம் இருப்பவர்கள் ஒரே வீட்டில் இருந்தால் நல்லதன்று.

7. யோனி பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் யோனி பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்யலாம்.

8. மாதவிடாய் காலத்தில் கணவருக்கு, மனைவி திதி கொடுக்கலாமா?

🌟 மாதவிடாய் காலத்தில் கணவருக்கு, மனைவி திதி கொடுப்பதை தவிர்க்கவும்.

🌟 வாரிசுகள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் திதி கொடுக்கலாம்.



Share this valuable content with your friends