No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னி ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 27, 2018   Ananthi   1024    நவ கிரகங்கள் 

கன்னி ராசியின் அதிபதி புதன்பகவான் ஆவார். புதன்பகவானுடன் குருபகவான் பகை என்ற நிலையில் நின்று அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்துக்கொள்வது மிகவும் கடினமாகும். நேரத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதும், விட்டுக்கொடுத்து செல்வதும் இவர்களிடம் எதிர்பார்க்கவே முடியாது.

🌟 மற்றவர்களின் நிலைப்பற்றி அறியாமல் தன்னை பற்றி தற்பெருமை பேசிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எதற்காகவும், யாருக்காகவும் கவலைக்கொள்ள மாட்டார்கள்.

🌟 வீட்டில் ஒருவிதமும், வெளியில் ஒருவிதமும் என இரட்டை வேடம் போடக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பேசி காரியத்தை முடித்துக் கொள்வதில் வல்லவர்கள்.

🌟 எதிலும் குறைக்குடமாக இருப்பினும் தனக்கு எல்லாம் தெரிவது போல் காட்டிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 ஆன்மீக பணிகளில் ஈடுபடுவது போல் தன்னை காட்டிக் கொள்ளக்கூடியவர்கள். ஆனால், உண்மையில் அச்செயலின் மீது கவனமோ, அக்கறையோ இருக்காது.

🌟 அன்னையின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

🌟 உடல் உழைப்பின்றி மூளையை மட்டும் பயன்படுத்தி செய்யும் வேலைகளில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.

🌟 அதிகப்படியான சொத்துச்சேர்க்கை உடையவர்கள். தன்னுடைய செலவுகளையும் பிறருடைய பணத்தில் செய்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 செலவு செய்வதில் கணக்கு பார்க்கக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends