No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துலாம் ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 27, 2018   Ananthi   568    நவ கிரகங்கள் 

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரபகவான் ஆவார். அசுர குருவான சுக்கிராச்சாரியாரை தேவகுருவான பிரகஸ்பதி பகையாகவே எண்ணுகின்றார். இதனால் இங்கு பகை என்ற நிலையில் அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 கண் மூடித்தனமான நம்பிக்கையால் பல செயல்களில் ஈடுபட்டு அவர்களே பிரச்சனைகளை தேடிக்கொள்வார்கள்.

🌟 எண்ணற்ற வாழ்க்கை பாடங்களை கற்றாலும் அதை விட்டு ஒதுங்காமல் அதிலேயே திரும்ப ஈடுபடுவார்கள்.

🌟 எவருடைய ஆலோசனையையும் அவ்வளவு எளிதில் ஏற்க மாட்டார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள்.

🌟 மற்றவர்களை குறைத்து தன்னை முன்னிலைப்படுத்தி பேசக்கூடியவர்கள்.

🌟 பிறரை பயமுறுத்தி தனது காரியத்தை முடித்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எந்த செயலானாலும் முன்னால் நிற்பார்கள். ஆனால், எவ்விதமான வேலையையும் செய்யாமல், மற்றவர்கள் செய்த வேலையை தான் செய்ததாக கூறி பெருமை பேசிக்கொள்வார்கள்.

🌟 எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதை வேண்டும் என்று செய்யக்கூடியவர்கள்.

🌟 யாரையும் ஏன் தன்னையும் நம்பாதவர்கள். உடன் இருப்பவர்கள் அனைவரையும் சந்தேக உணர்வுடன் பார்க்கக்கூடியவர்கள்.

🌟 எங்கெல்லாம் கடன் கிடைக்குமோ அங்கெல்லாம் கடன் வாங்கி கொள்ளக்கூடியவர்கள். இவர்களிடம் கடனை திருப்பி வாங்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

🌟 நிதானமற்ற பேச்சுகளாலும், மற்றவர்களை மதிக்காத குணத்தாலும் அதிக எதிரிகளை உருவாக்கிக்கொள்வார்கள்.

🌟 இவர்களின் வாழ்க்கையில் போராட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. உடன் இருப்பவர்கள் மூலமே பல இன்னல்கள் தோன்றினாலும் அவர்களின் புகழ்ச்சியில் மயங்கக்கூடியவர்கள்.

🌟 வாக்குவன்மை உடையவர்கள். பேச்சால் எதிரில் இருப்பவரை கதிகலங்க வைக்கக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends