No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முன்னோர்களால் ஏற்படும் சாபத்தை போக்க சிறந்த பரிகாரங்கள் !!

Aug 27, 2018   Ananthi   542    ஆன்மிகம் 

🌟 பல குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவுகள் நிம்மதியே இருக்காது. ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கியப் பாதிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். யார் கொடுத்த சாபமோ இப்படி வாழ்க்கை இருக்கின்றதே என்று நம்மில் பலரும் புலம்புவதை கேட்டிருப்போம். இதற்குரிய தீர்வு என்ன?

🌟 முற்காலத்தில் முனிவர்கள் கோபத்தினால் சாபம் கொடுத்தனர். ஆனால், இக்காலத்தில் மனிதர்களே சாபம் கொடுக்கின்றனர். ஒவ்வொரு சாபத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு உண்டு.

🌟 ஒருவரின் சுய ஜாதகத்தினை ஆராய்ந்து பார்த்தால் தான் எந்த சாபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியும். அதனைக் கண்டறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும்.

🌟 ஜோதிடப்படி, ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்.

சில சாபங்களையும் அதற்குரிய பரிகாரங்களையும் இங்கு பார்க்கலாம்.

சுமங்கலி சாபம் :

🙏 சுமங்கலி சாபம் விலக அதிகார நந்தியை, திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும்.

சகோதர சாபம் :

🙏 சகோதர சாபம் விலக அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக விஸ்வரூப நந்தி மற்றும் திசைமாறிய நந்தியைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் எளிதில் விமோசனம் பெற இயலும்.

பெற்றோர் சாபம் :

🙏 பெற்றோர்களால் ஏற்படும் சாபங்கள் விலக பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்ய வேண்டும். அவர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பவர் என்பதால் அதற்கு முன்னறிவிப்பாக மூன்றுமுறை அவரது சன்னதியில் மெதுவாகக் கைத்தட்டி அதன்பிறகு தகவலை எடுத்துரைத்துப் பிறகு அபிஷேகம் செய்வது நல்லது.

ஆசிரியர் சாபம் :

🙏 ஆசிரியர் சாபம் விலக சப்தமி திதியில் துவார பாலகர்களை வணங்க வேண்டும்.

இதுபோன்று மற்ற சாபங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன. அவற்றைச் செய்தால் நிச்சயமாக சாப விமோசனத்தை நாம் பெற இயலும்.



Share this valuable content with your friends