No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இறந்தவர்கள் அசைவம் சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 04, 2020   Ananthi   2600    கனவு பலன்கள் 

1. குலதெய்வத்தை வழிபடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குலதெய்வத்தை வழிபடுவது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

2. நாய்க்குட்டி கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய்க்குட்டி கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. சாதம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாதம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் பழக்கவழக்கங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இழுபறியாக இருந்துவந்த சில செயல்கள் முடிவதற்கான வாய்ப்புகள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

5. எனக்கு யாரோ சாபம் விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக இருந்துவந்த மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. சாலையில் நின்று கொண்டு பிச்சை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இழுபறியான காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி பணவரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. இறந்தவர்கள் அசைவம் சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends