No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தனுசு ராசியினருக்கு திருமணம் கைகூடுமா?

Aug 04, 2020   Ananthi   326    ஜோதிடர் பதில்கள் 

1. கடக ராசியில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் துரிதமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எளிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 தன் விருப்பப்படி வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஜாதகத்தில் லக்னத்தை கண்டுபிடிப்பது எப்படி?

🌟 ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் ல என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் இடம் லக்னம் என்று அழைக்கப்படும்.

🌟 ராசியின் பெயரே லக்னத்திற்கும் இருப்பதால் எந்த ராசி என்பதை அறிந்து, அது லக்னமாக கொண்டு பலன் அறிந்து கொள்ளவும்.

3. வீட்டில் கிளி வளர்க்கலாமா?

🌟 வீட்டில் வளர்க்கும் கிளிக்கு பாதுகாப்பு இருக்கும் பட்சத்தில் கிளி வளர்க்கலாம்.

🌟 முடிந்த அளவு பறவைகள் சுதந்திரமாகவே இருக்க விரும்புகின்றன. அதை கூட்டிற்குள் அடைப்பதை தவிர்ப்பது நன்மையாகும்.

4. ஆண், பெண் இருவருக்கும் ஒரே திசை நடந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஆண், பெண் இருவரின் திசையும் லக்ன சுபர் திசைகளாக இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். அடுத்தடுத்து திசைகளை ஆராய்ந்து முடிவு எடுப்பது நன்மையளிக்கும்.

5. தனுசு ராசியினருக்கு திருமணம் கைகூடுமா?

🌟 அனைத்து ராசியினருக்கும் திருமணமும், வாழ்க்கை துணையும் நன்றாகவே அமையும்.

🌟 அவர்கள் அமையும் விதம் என்பது நாம் செய்த கர்ம வினையின் அடிப்படையில் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.



Share this valuable content with your friends