No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மலைக்கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 03, 2020   Ananthi   391    கனவு பலன்கள் 

1. பெருமாள் கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. மலைக்கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பதவி உயர்விற்கான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஒரு பெண் மற்றொரு பெண்ணிற்கு வளையல் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. உயிரோடு இருப்பவர் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் அந்த நபரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. சிவன் கோவிலில் அபிஷேகம் செய்யும் பொழுது ஆமை அங்கு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. மரம் நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மரம் நடுவது போல் கனவு கண்டால் தொழில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

7. உறவினர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 உறவினர்களை கனவில் கண்டால் எதிர்பாராத சில அலைச்சல்களால் காலதாமதம் ஏற்பட்டாலும், சில வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends