No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வடக்கு பகுதியில் எடை மிகுந்த பொருட்களை வைத்துக் கொள்ளலாமா?

Jul 22, 2020   Ananthi   287    ஜோதிடர் பதில்கள் 

1. வடக்கு பகுதியில் எடை மிகுந்த பொருட்களை வைத்துக் கொள்ளலாமா?
🌟 வடக்குப் பகுதியில் எடை மிகுந்த பொருட்களை வைத்துக் கொள்வதை தவிர்ப்பது பொருளாதார பிரச்சனைகளை குறைக்கும்.

2. வீட்டின் எதிரில் கறிக்கடை அமைந்திருக்கலாமா?
🌟 வீட்டின் எதிரில் கறிக்கடை அமைந்திருப்பது அவ்வளவு சிறப்பானது அல்ல.

3. லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
🌟 அழகான தோற்றம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 சபல எண்ணம் நிறைந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. செவ்வாய் திசையில், ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 வெளியூர் பயணங்களால் மேன்மை உண்டாகும்.

🌟 சகோதரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

🌟 வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஞாயிற்றுக்கிழமை அன்று முடி திருத்தம் செய்து கொள்ளலாமா?
🌟 ஞாயிற்றுக்கிழமை அன்று முடி திருத்தம் செய்வதை காட்டிலும் திங்கள் அல்லது புதன்கிழமை செய்து கொள்வது நன்மையளிக்கும்.

6. வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தை பிறக்கலாமா?
🌟 வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தை பிறக்கலாம்.

7. 7ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?
🌟 எதிலும் வேகமாக செயல்பட கூடியவர்கள்.

🌟 திருமண வாழ்க்கை காலதாமதமாக அமையும்.

🌟 உடனிருப்பவர்களுடன் அடிக்கடி சண்டை போடக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுபலன்களே ஆகும்.



Share this valuable content with your friends