No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய் தோஷத்தின் விதிவிலக்குகள் யாவை?

Jul 10, 2020   Ananthi   348    ஜோதிடர் பதில்கள் 

1. மகர லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 நிர்வாகத்திறன் உடையவர்கள்.

🌟 உள்ளுணர்வு அதிகம் உடையவர்கள்.

🌟 பல துறைகள் சார்ந்த அறிவு மற்றும் ஞானம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. செவ்வாய் தோஷத்தின் விதிவிலக்குகள் யாவை?

🌟 கடகம், சிம்மம் இந்த இரண்டு லக்னக்காரர்களுக்கும் செவ்வாய் தோஷம் இல்லை.

🌟 செவ்வாய் வக்ரம் அடைந்திருப்பின் தோஷம் இல்லை.

🌟 கடகம் மற்றும் மகரம் ஏழாம் வீடானால் செவ்வாய் தோஷம் இல்லை.

🌟 செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிகத்தில் இருப்பின் செவ்வாய் தோஷம் இல்லை.

3. மேஷ ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கம்பீரமான தோற்றமும், நிமிர்ந்த நடையும் உடையவர்கள்.

🌟 அடர்த்தியான தலைமுடி கொண்டு இருப்பார்கள்.

🌟 நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் கொண்டவர்கள்.

🌟 மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 பிரபலமானவர்களின் நட்புகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ரிஷப லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 தற்புகழ்ச்சி உடையவர்கள்.

🌟 சலனபுத்தி கொண்டவராக இருக்கக்கூடியவர்கள்.

🌟 சூடான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends