No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் செய்வினை இருப்பதை அறிவது எப்படி?

Aug 23, 2018   Ananthi   2126    ஜோதிடர் பதில்கள் 

1. வேலை செய்யும் இடத்தில் சில தவறுகளை செய்துவிட்டேன். இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று கவலையாக உள்ளது. ஏதேனும் பரிகாரம் உண்டா?

🌟 செய்த வினைக்கு ஏற்ற அதன் பலனையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதை யாராலும் மாற்ற இயலாது.

🌟 ஆகையால், அந்த வினையால் ஏற்பட இருக்கும் பாதிப்புகளை முழுவதுமாக குறைக்க இயலாது.

🌟 ஆனால், அதன் வீரியத்தன்மையை மட்டும் குறைக்க இயலும்.

🌟 அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு சமுத்திரத்தில் மனதார இனி மேற்கொண்டு இந்த மாதிரி பிழைகளை செய்யமாட்டேன் என உறுதியோடு சமுத்திர நீரில் 18 முறை தலை முழுகி வர செய்த பாவங்கள் எல்லாம் குறையும்.

2. வீட்டில் செய்வினை இருப்பதை எப்படி அறிவது?

🌟 வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 குடும்ப உறுப்பினர்களால் நிம்மதியற்ற சூழல் உண்டாகும்.

🌟 எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் எல்லாம் கரையும்.

🌟 பணி செய்யும் இடங்களில் பதற்றம் மற்றும் அவப்பெயர்கள் உண்டாகும்.

3. நான் துலாம் லக்னம், லக்னத்தில் சனி உள்ளது. இதற்கு என்ன பலன்? மேலும் திருமணத்தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எண்ணிய செயலை முடிப்பதில் அதிக உழைப்பை உடையவர்கள்.

🌟 வைராக்கியம் உடையவர்கள்.

🌟 குறைவான நினைவுத்திறனை உடையவர்கள்.

🌟 திருமணத்தடை அகல வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியையும், சுக்கிரனையும் வழிபட்டு வரவும்.

🌟 மேலும், ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உள்ளதா? என அறிந்து அதற்கு தகுந்தாற்போல் வழிபாட்டை மேற்கொள்ளவும்.

4. மீன லக்னம் உடையவர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய எந்த ராசிக்கல் அணிய வேண்டும்?

🌟 மீன லக்னம் உடையவர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய புஷ்பராக ராசிக்கல் அணிய வேண்டும்.

🌟 ராசிக்கற்களை தகுந்த ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் அணிவது சிறப்பு.

5. கடக லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் சனி இருந்தால் என்ன பலன்? இதற்கு பரிகாரம் உண்டா?

🌟 அதிக செலவும், தாராள மனப்பான்மையும் உடையவர்கள்.

🌟 மனதில் சில நிறைவேறாத எண்ணங்களும், அதனால் கவலைகள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

🌟 உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும்.

🌟 சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

6. கருவளையம் அதிகமாக தெரிந்தால் என்ன பலன்?

🌟 கருவளையம் அதிகமாக தெரிந்தால் தூக்கமின்மையும், உடலில் நீர்ச்சத்துகள் குறைவாக உள்ளதையும் உணர்த்துகிறது.

7. அமாவாசை அன்று வெளிநாடு செல்லலாமா?

🌟 ஏற்கனவே திட்டமிட்ட பயணங்களாக இருப்பின் அமாவாசை அன்று வெளிநாடு செல்லலாம்.



Share this valuable content with your friends