No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கட்டக்கூடிய வீடு பல வருடங்களாக தடைப்படுகிறதா?அதற்கு என்ன காரணம் ?

Aug 23, 2018   Ananthi   466    வாஸ்து 

நாம் கட்டக்கூடிய வீடு பல வருடங்களாக தடைப்பட காரணம் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

🏠 நீங்கள் கட்டக்கூடிய வீட்டிற்கு முதலில் மிக தெளிவான திட்டம் வேண்டும். அதேபோல் பூமி பூஜை போடக்கூடிய நாள் மிக சிறந்த நன்னாளாக இருக்க வேண்டும்.

🏠 நாம் கட்டக்கூடிய வீட்டில் அஸ்த்திவாரம் வரை சுவர் வந்தவுடன் நான்குபுறமும் காம்பவுண்ட் சுவருக்கு உண்டான அஸ்த்திவாரத்தை கட்டி முடிக்க வேண்டும். பிறகு வீட்டின் அஸ்த்திவாரத்திற்கும் காம்பவுண்ட் அஸ்த்திவாரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மண்ணைக் கொண்டு நிரப்பி கொள்ள வேண்டும். இதுபோல் நீங்கள் செய்யும்போது நான்கு புறமும் மேடு பள்ளம் என்கிற விஷயம் கட்டுப்பட்டு ஒரே சமமான இடமாக மாறிவிடும்.

🏠 மேலும், தவறான இடத்தில் படி அமைப்பது

🏠 தெருகுத்து தெருபார்வை எது நல்லவை? எது கெட்டவை? என்பதை தெரியாமல் வீடு கட்டுவது

🏠 வடக்கு, கிழக்கு பகுதியில் இடைவெளி இல்லாமல் வீடு கட்டுவது

🏠 அனுபவமில்லாத ஆட்களை கொண்டு வேலை செய்வது

🏠 காம்பவுண்ட் சுவரை கட்டாமல், நாம் கட்டக்கூடிய வீட்டிற்கு தெற்கு, மேற்கு பகுதி பள்ளம் போன்ற அமைப்புகள் இருக்கும்போது கட்டிட வேலை மட்டுமல்லாது, பணத்தட்டுப்பாடும் வேலை முடிய வருட கணக்குகள் ஆக வாய்ப்புண்டு.

🏠 மேற்கூறியப்படி வீட்டின் அமைப்புகள் தவறாக கட்டும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளருக்கும், வீடு கட்டும் இன்ஜினியருக்கும் பணப்பிரச்சனை ஏற்படும்.


Share this valuable content with your friends