No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இரு சக்கர வாகனம் வாங்க நல்ல நாள் இது தானா!!

Aug 22, 2018   Ananthi   727    ஜோதிடர் பதில்கள் 

1. இரு சக்கர வாகனம் வாங்க நல்ல நாள் எது?

🌟 வாகனங்களுக்கு அதிபதி சுக்கிர பகவான் ஆவார்.

🌟 ஆகவே, வாகனங்களை வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் வாங்கலாம்.

2. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வீடு மாற்றம் செய்தால் ஏதாவது பிரச்சனைகள் வருமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வீடு மாற்றம் செய்தால் பிரச்சனைகள் வராது.

🌟 ஆனால், வீடு மாற்றம் செய்யும் போது பெண்களுக்கு அதிகப்படியான வேலைகள் ஏற்படும்.

🌟 மேலும் புதிய வீட்டில் பூசப்படும் சுண்ணாம்பு பூச்சுகள் மற்றும் வண்ணங்கள் அவர்களின் உடல்நிலையையும், மனநிலையையும் பாதிக்கலாம்.

🌟 இதை தவிர்க்கவே நம் முன்னோர்கள் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலங்களில் வீட்டில் கிரகப்பிரவேசம் மற்றும் குடிப்பெயர்தலை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

3. குலதெய்வக் கோவிலில் தேங்காய் அழுகிப்போனால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 குலதெய்வக் கோவிலில் தேங்காய் அழுகிப்போனால் செய்யும் செயல்களில் சில காலதாமதம் உண்டாகும்.

🌟 எனவே, செயல்களில் நிதானமாக செயல்படுவது சாலச் சிறந்தது.

4. சிம்ம லக்னம் 3ல் சனி, செவ்வாய், 6ல் சந்திரன், 8ல் கேது, 12ல் சூரியன், குரு, புதன் மற்றும் சுக்கிரன் இவை எல்லாம் மறைவு ஸ்தானங்கள். இதற்கு பலன் என்ன?

🌟 3, 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆகும். கிரகங்கள் பலத்துடனும், பலமின்றி இருப்பதும் நாம் செய்யும் வினைகளின் அடிப்படையில் தான்.

🌟 மறைவு ஸ்தானங்களில் நின்ற கிரகங்களால் சில சுப பலன்கள் உண்டாகும்.

🌟 வாழ்க்கைப் பற்றிய புரிதலையும், போராட்டத்தையும் ஏற்படுத்தும்.

5. பொருந்தாத ஜாதகத்தை இணைத்து திருமணம் செய்து வைத்தால் பிறக்கும் குழந்தை ஊனமாக பிறக்குமா?

🌟 பொருந்தாத ஜாதகத்தை இணைத்து திருமணம் செய்து வைத்தால் பிறக்கும் குழந்தை ஊனமாக பிறக்கும் என்பது உண்மையன்று.


Share this valuable content with your friends