No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாகன விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 21, 2018   Ananthi   58261    கனவு பலன்கள் 

1. புதிதாக ஈன்றெடுக்கப்பட்ட பசுங்கன்றை கனவில் கண்டால் என்ன பலன்?

🌷 புதிதாக ஈன்றெடுக்கப்பட்ட பசுங்கன்றை கனவில் கண்டால் பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

2. வாகன விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 வாகன விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த இன்னல்கள் அகலும்.

3. சிலையை திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 சிலையை திருடுவது போல் கனவு கண்டால் நெருங்கிய உறவினர்களிடம் மனக்கசப்புகள் ஏற்படலாம். எனவே கவனத்துடன் செயல்படவும்.

4. மனைவி, கணவனை விட்டு பிரிந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 மனைவி கணவனை விட்டு பிரிந்து செல்வது போல் கனவு காண்பது இதுவரை மனைவி அனுபவித்து வந்த கஷ்டங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. சாலையில் எண்ணெய் கொட்டிவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 சாலையில் எண்ணெய் கொட்டிவிட்டது போல் கனவு கண்டால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த தடைகள் அகலும்.

6. தாய்மாமன் மகளை திருமணம் செய்வது போல் கனவு கண்டேன். இது நல்லதா? கெட்டதா?

🌷 தாய்மாமன் மகளை திருமணம் செய்வது போல் கனவு கண்டால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டு துன்பத்தில் சிக்கிக்கொள்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது. ஆகவே, கவனமாக செயல்படவும்.


Share this valuable content with your friends