No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 21, 2018   Ananthi   659    நவ கிரகங்கள் 

🌞 மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாயுடன், குரு நட்பு என்ற நிலையில் நின்று புரியும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌷 பெருந்தன்மையான குணம் உடையவர்கள்.

🌷 நன்கு சிந்தித்து முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள்.

🌷 அனைவரையும் கட்டுப்படுத்தும், அதே சமயம் இனிமை கலந்த பேச்சுகளை உடையவர்கள்.

🌷 எடுத்த காரியத்தில் எந்த பிழையுமின்றி திறமையுடன் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌷 சுயநலம் இல்லாமல் பொதுநல செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள்.

🌷 தனது கௌரவம் எந்நிலையிலும் பாதிக்கா வண்ணம் செயல்படக்கூடியவர்கள்.

🌷 சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌷 அனைவருக்கும் பேதமின்றி உதவக்கூடியவர்கள்.

🌷 எதிலும் விளம்பரம் தேடாதவர்கள்.

🌷 நித்திரை சுகம் உடையவர்கள்.

🌷 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனுசரித்து செல்லக்கூடியவர்கள்.

🌷 எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள்.

🌷 எளிதில் யாரையும் நம்பமாட்டார்கள்.

🌷 ஆன்மீக வழிபாடு மற்றும் பூஜை புனஸ்காரங்களை மேற்கொள்ளக்கூடியவர்கள்.

🌷 குலப்பெருமை உயரும்படியான செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends