No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டின் வாயிலின் முன்னால் பூச்செடிகள் வைக்கலாமா?

Aug 21, 2018   Ananthi   736    ஜோதிடர் பதில்கள் 

1. திதி சூனியம் என்றால் என்ன?

🌷 ஒரு குறிப்பிட்ட திதியில் பிறந்தவர்களுக்கு சில ராசி பாவகங்கள் பலம் இழப்பதற்கு திதி சூனியம் என்று பெயர்.

2. வீட்டின் வாயிலின் முன்னால் பூச்செடிகள் வைக்கலாமா?

🌷 வீட்டின் வாயிலின் முன்னால் பூச்செடிகள் வைக்கலாம்.

3. ஒரு பெண் தன் காலில் எத்தனை விரல்களில் மெட்டி அணிய வேண்டும்?

🌷 மெட்டியை கால்களில் உள்ள பெருவிரலுக்கு அடுத்த இரு விரல்களிலும் அணியலாம்.

🌷 திருமணமான பெண்கள் மெட்டியை அணிவதால் கருப்பையில் உள்ள பிரச்சனைகள் தீரும்.

🌷 மெட்டியை அணிவதால் விரைவாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.

4. நான் மகர ராசி, துலாம் லக்னம், திருவோண நட்சத்திர முதல் பாதம். நான் வைரம்(ஒயிட் ஜிர்கான்) மோதிரம் அணியலாமா? எந்த கையில் எந்த விரலில் அணிய வேண்டும்?

🌷 துலாம் லக்னக்காரர்கள் வைர மோதிரத்தை வலது கையில் உள்ள மோதிர விரலில் அணிய வேண்டும்.

🌷 ராசிக்கற்களை அணியும்போது தகுந்த ஆலோசனை பெற்று, பின் அணிய வேண்டும்.

5. மிதுன லக்னத்திற்கு எந்த தொழில் செய்யலாம்?

🌷 நீர் சம்பந்தபட்ட தொழில் வாய்ப்புகள் அமையும்.

🌷 ஆன்மீகம் தொடர்புடைய தொழில்கள் சாதகமாக அமையும்.

🌷 வட்டிக்கடை, நகை வியாபாரம் போன்றவை சாதகமாக இருக்கும்.

🌷 பிறருக்கு எடுத்துரைக்கின்ற கல்வி சம்பந்தமான பணிகள் சாதகமாக அமையும்.

6. மீன லக்னத்தில் குருவுடன் ராகு இருக்கிறது. ராசி மிதுனம் இதனால் ஏற்படும் விளைவுகள் யாவை?

🌷 தாராளமாக செலவு செய்யக்கூடியவர்கள்.

🌷 ரகசியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌷 திடீர் யோகமும், எதிர்பாராத தனவரவும் உண்டாகும்.

7. நான் மேஷ ராசி, மிதுன லக்னம். ராசியில் குருவும், சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌷 பல கலைகளில் ஞானம் உடையவர்கள்.

🌷 எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

🌷 நல்ல குணங்களை உடையவர்கள்.

8. நான் மேஷ ராசி, மேஷ லக்னம். ராகு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் 6ல் உள்ளது. இதற்கு என்ன பலன்?

🌷 எதிர்பாலின மக்களின் மீது ஈடுபாடு உடையவர்கள்.

🌷 போராடும் குணம் உடையவர்கள்.

🌷 எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends