No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?

Mar 30, 2020   Ananthi   407    ஜோதிடர் பதில்கள் 

1. வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறக்கலாம்.

2. அமாவாசை அன்று மாதவிலக்கு ஏற்பட்டால் சாமி கும்பிடலாமா?

🌟 அமாவாசை அன்று மாதவிலக்கு ஏற்பட்டால் சாமி கும்பிடுவதை விடுத்து அடுத்த அமாவாசையில் சாமி கும்பிடவும்.

3. குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?

🌟 குலதெய்வம் தெரியாதவர்கள் வீட்டில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, இஷ்ட தெய்வத்தை வேண்டி குலதெய்வம் அறியும் பொருட்டு தீபம் ஏற்றி வரவும்.

🌟 அவ்வாறு தீபம் ஏற்றி வர அதற்கான வழிகளும், கோவிலின் இருப்பிடம் பற்றிய குறிப்புகளும் கூடிய விரைவில் கிடைக்கும்.

4. சிம்ம ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சூடான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌟 பெற்றோர்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 திறமைமிக்க வாழ்க்கை துணைவரை அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஒன்பதில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 தாராள தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும்.

🌟 பெற்றோர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. லக்னத்திற்கு 11ம் இடத்தில் சூரியனும், புதனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 புத்திசாலியான நண்பர்கள் கிடைப்பார்கள்.

🌟 மகிழ்ச்சியான வாழ்க்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends