No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதிய வீடு கட்டும் போது ஏன் கடன் ஏற்படுகிறது?

Aug 14, 2018   Ananthi   557    வாஸ்து 

புதிய வீடு கட்டும்போது கடன் ஏற்படுவதற்கான காரணங்கள் :

1. ஒரு சிலர் மட்டுமே கையில் நிறைய பணம் வைத்துக் கொண்டு வீடு கட்டுகின்றனர்.

2. 60% மக்கள் கையில் பணமே இல்லாமல், Loan, மாதத்தவணை, EMI மூலமாகவே வீட்டினை கட்டத் தொடங்குகின்றனர்.

3. ஏற்கனவே, வேலை சம்பந்தபட்ட பிரச்சனைகளுக்காக வங்கிகள், பைனான்ஸ் போன்ற இடங்களில் கடன் வாங்கி இருப்பது வீட்டின் மீது கடன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

4. நாம் நிலம் வாங்குவதற்கு சில கிரகங்கள் நமக்கு உதவி செய்கின்றன. அதேபோல் நாம் வீடு கட்ட வேண்டும் என்றால், கிரக அமைப்புகள் அமையும் வரை காத்திருந்து வீடு கட்டுதல் வேண்டும்.

5. நாம் வீடு வாங்கும்போது வாஸ்து நிபுணரை அணுகி கடன் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் கடன் ஏற்படுகிறது?

1. இடம் வாங்கும்போது கடன் உண்டாக்கக்கூடிய அமைப்புடைய இடத்தை வாங்குவது.

2. வீடு கட்ட Plan போடும் போது கடன் வருவது போல் Plan போடுவது

3. ஜாதகரீதியாக சுபவிரயம் என்றிருக்கும்போது, அதை தவறாக புரிந்து கொண்டு கடன் வாங்கி வீடு கட்டுதல்

4. தற்சமயம் குடியிருக்கும் வீடு தவறான அமைப்புடைய வீடாக இருக்கும் பட்சத்தில் புதியதாக கட்டக்கூடிய வீடு கடனை ஏற்படுத்தும்.

5. வீடு கட்டும்முன், வீட்டின் பெரியவர்களின் யோசனைகளை கேட்காமல் கடனில் மாட்டிக்கொள்வது.

கட்டிய வீட்டினை ஒருவர் விற்கும்போது அதை வாங்கலாமா? வாங்கக்கூடாதா?

நீங்கள் கட்டிய வீட்டினை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் :

1. அந்த வீட்டினுடைய முதலாளி என்ன தொழில் செய்கிறார்?

2. ஏன் அந்த வீட்டினை விற்பனை செய்கிறார்?

3. அவர்களுக்கு வங்கிகளில் கடன் இருக்கிறதா?

4. அந்த நிலத்தில் ஏலம், கோர்ட், கேஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறதா?


இதை அனைத்தையும் கவனத்தில் கொண்டு வீட்டினை வாங்க வேண்டும்.

இன்றைய காலத்தில் கட்டிடத்திற்கு என்று நிறைய விளம்பரங்கள் உண்டு. அதை பார்த்து வீட்டினை வாங்கலாமா? அதற்குமுன் வீட்டினுடைய தண்ணீர் தொட்டி, சமையலறை, பூமி அமைப்பு, காம்பவுண்ட் அமைப்பு, Hall, படுக்கையறை, கட்டிடத்தின் உள்படி அமைப்புகள் போன்ற அமைப்புகளை பார்த்து வாஸ்து நிபுணரின் ஆலோசனையுடன் வாங்க வேண்டும்.

ஒரு முறை நீங்கள் செய்யும் முதலீடு லாபகரமாக இருக்க விரும்பினால், அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியுடன் முதலீடு செய்வது சிறப்பு.


Share this valuable content with your friends