No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாவல் மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

Aug 13, 2018   Ananthi   5768    கனவு பலன்கள் 

1. தெரிந்த நபர் ஒருவர் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்ததாகவும், வீட்டிற்கு வந்து பிரசாதம் வழங்குவதாகவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மீக பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

2. வயதான ஒருவர் உடையில்லாமல் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த விருப்பம் ஒன்று விருப்பமில்லாத முறையில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. அம்மா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 அம்மா இறப்பது போல் கனவு கண்டால் தாயின் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும்.

🌷 அன்னையின் மனதை வருத்திக் கொண்டிருந்த துன்பம் கூடிய விரைவில் அகலும்.

4. ஐந்து தலை நாகம் ஒன்று என்னை விழுங்கியது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் உடலிற்கும், மனதிற்கும் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். 🌷 சாதகமற்ற சூழலால் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும்.

🌷 வேலைகள் மற்றும் நண்பர்களிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

5. நாவல் மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌷 நாவல் மரத்தை கனவில் கண்டால் நன்மை உண்டாகும்.


Share this valuable content with your friends