1. குழந்தைப் பிறக்கும் போது பித்ரு தோஷம் இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
🌷 பித்ரு தோஷம் இருக்கும் பட்சத்தில் அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளியுங்கள்.
🌷 மாதத்தில் ஒரு முறையாவது குலதெய்வ கோவிலிற்கு சென்று வழிபட வேண்டும்.
🌷 குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுதல் சுபிட்சத்தை ஏற்படுத்தும்.
🌷 பசு மாட்டிற்கு உணவு அளித்தல், அவற்றை பேணி காத்தல் போன்ற செயல்களால் பித்ரு தோஷம் நீங்கும்.
2. மரண யோகத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன் மற்றும் பரிகாரம் என்ன?
🌷 குழந்தை பிறப்பிற்கு நேரம் காலம் என்பது இல்லை. எல்லா காலங்களிலும் குழந்தைகள் பிறக்கலாம்.
🌷 குழந்தை பிறப்பிற்கு லக்னம் மட்டுமே அவசியமாகும்.
🌷 குழந்தைகளை சிறு வயது முதலே ஆன்மீக எண்ணங்களுடனும், நன்மை தீமைகள் எது? என சொல்லிக்கொடுத்து வளர்ப்பதே சிறந்த பரிகாரம் ஆகும்.
3. எனது வீட்டில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்கிறது. காரணம் தெரியவில்லை. நான் மிகவும் கவலையாக இருக்கிறேன். இதற்கு தீர்வு சொல்லுங்கள்.
🌷 வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தவும்.
🌷 வீட்டை கல் உப்பு கலந்த நீரை கொண்டோ அல்லது கடல் நீரை கொண்டோ சுத்தம் செய்யவும்.
🌷 பசு மாட்டின் சாணம் கலந்த நீரை வீட்டின் வாசற்படிகளில் தெளிக்கவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வரவும்.
🌷 பின் வீட்டின் அருகில் இருக்கும் எல்லைச்சாமிகளையும், குலதெய்வத்தையும் அடிக்கடி வழிபட்டு வர சுபிட்சமும், மேன்மையும் உண்டாகும்.
4. கடக ராசியில் இப்பொழுது புதன், சூரியன், ராகு இணைந்திருப்பதன் நன்மை, தீமைகள் என்ன?
🌷 அரசு சம்பந்தமான துறைகளில் மறைந்துள்ள இரகசியம் வெளிப்படும்.
🌷 கணிதம் மற்றும் மென்பொருள் சம்பந்தமான துறையில் சில நெருக்கடியான சூழல் நேரிடும்.
🌷 பேராசையின் காரணமாக தலைமைப் பதவியில் இருப்போர் செய்த கணக்கு வழக்கு விவகாரம் வெளிப்படும்.
5. ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்யலாமா?
🌷 ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்வதை காட்டிலும் மற்ற சுப நட்சத்திரங்களில் திருமணம் செய்வது உத்தமம்.