No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனி இங்கு இருந்தால்... வெளிநாடு செல்லும் யோகம்... இவர்களுக்கே...!

Mar 09, 2020   Malini   321    ஆன்மிகம் 

🌟 வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்குரிய துணிச்சல் மற்றும் அதை கையாளுவதற்குரிய அனுபவத்தையும் தருவாரே தவிர சனிபகவான் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு மனிதனை கீழே போக செய்யமாட்டார்.

🌟 வெளியில் செல்ல தயங்கக்கூடிய தொழில்களுக்கு சனி காரகத்துவம் பெறுகிறார். இவை தவிர கறுப்பு தானியங்கள், பெட்ரோல், சினிமா போன்றவற்றிற்கும் சனி காரகத்துவம் பெறுகிறார். சனி வலுகுறைந்திருந்தால் ஜாதகருக்கு ஆயுள் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

🌟 சனியின் வலுகுறைந்து இருப்பவர்கள் திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசிக்கலாம். சனிபகவானை தரிசிக்கும்போது ஓரமாக நின்றுதான் அவரை தரிசிக்க வேண்டும். நேருக்கு நேர் நின்று அவரை வணங்கக்கூடாது.

🌟 லக்னத்திற்கு 4-ம் இடத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரர் வெளிநாடு சென்றால் வெற்றி பெறுவார்கள்.


4-ல் சனி இருந்தால் என்ன பலன்?

👉 பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.

👉 குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.

👉 பெருத்த உடல்வாகு உடையவர்கள்.

👉 உறவினர்களால் ஆதாயம் குறைவு.

👉 திடீர் இழப்புகளை உடையவர்கள்.

👉 தனிமையை விரும்பும் தன்மை உடையவர்கள்.

👉 நல்ல சிந்தனையாளர்கள்.

👉 சோம்பேறித்தனமான குணம் உடையவர்கள்.

👉 அரசியலில் ஆதாயம் இல்லாதவர்கள்.

👉 சிலருக்கு தடைகளை உடைய கல்வி ஏற்படலாம்.

👉 வாகனத்தினால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.


Share this valuable content with your friends