No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நண்பனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 10, 2018   Ananthi   11347    கனவு பலன்கள் 

1. என் கழுத்தில் உள்ள மாலையை ஒரு பெண்ணின் கழுத்தில் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் உங்களின் முயற்சியால் மற்றவர்கள் பயனடைவார்கள்.

🌷 மேலும், எதிர்பார்த்த சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

2. மாடு என்னை கடித்து அதன் பல் வலது கையில் பதிந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 மாடு உங்களை கடித்து அதன் பல் வலது கையில் பதிந்தது போல் கனவு கண்டால் வீட்டில் பண நெருக்கடிகள் குறையும்.

3. வீட்டில் பாம்பு உள்ளது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 வீட்டில் பாம்பு உள்ளது போல் கனவு காண்பது உறவினர்களால் சில சங்கடங்கள் நேரிடலாம் என்பதைக் குறிக்கிறது.

4. பூனையின் முடி பாலில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 பூனையின் முடி பாலில் விழுவது போல் கனவு கண்டால் முன்னேற்றமான சில வாய்ப்புகள் சோதனைக்கு பின்னே கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

🌷 எனவே, செய்யும் முயற்சிகளில் முழு முயற்சியுடன் ஈடுபடவும்.

5. நண்பனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 நண்பனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு காண்பது விரயச் செலவுகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

🌷 வீட்டில் உள்ளோரின் உடல் நலத்தில் கவனம் வேண்டும்.

🌷 தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் பண நெருக்கடியை தவிர்க்கலாம்.



Share this valuable content with your friends