No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரி நாள் என்றால் என்ன.?

Jan 27, 2020   Ananthi   401    ஜோதிடர் பதில்கள் 

1. மாசி மாதம் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா?

Ἷ சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்திய மாதம் மாசி மாதம். எனவே, மாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போனால் சிறப்பான பலனைத் தராது.

2. சிம்ம லக்னத்திற்கு 9-க்குடையவன் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மிதுன லக்னத்திலிருந்து 12ல் சனியும், சந்திரனும் சேர்ந்தால் என்ன பலன்?

🌟 மென்மையான குணம் கொண்டவர்கள்.

🌟 மறைமுக செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. செவ்வாய் திசை, சுக்கிரன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 செய்யும் செயல்களில் கீர்த்தி உண்டாகும்.

🌟 மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள்.

🌟 வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கரி நாள் என்றால் என்ன?

🌟 ஒருநாள் முழுமையாக தன் சுபத்தன்மையை இழக்கும் நாளே கரிநாள் எனப்படும்.

🌟 கரிநாள் சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற நாள் அல்ல.

🌟 கரிநாளில் செய்யும் சுப நிகழ்ச்சிகள் மத்திமமான பலனைத் தரும்.



Share this valuable content with your friends