No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆண்டாளின் கிளி..!

Jan 06, 2020   Ananthi   351    ஆன்மிகம் 

🌟 108 வைணவ திவ்ய தேசங்களில் முதலாவது ஸ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடாகும். கடைசித் தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இது அவரது தாய் வீடாகும். எனவே, 108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவர் என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.

🌟 11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ராஜ கோபுரம், 196 அடி உயரமுடையது. இது இரட்டைக் கோவிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழமையான வடபத்ரசாயி கோவில் உள்ளது. மேற்கில் ஆண்டாள் திருக்கோவில் உள்ளது. இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம்.

🌟 இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சன்னிதி ஒன்றும் அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தினாலோ திருமணத்தடை நீங்கி, செல்வம் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🌟 ஆண்டாளின் திருக்கோவில் முழுவதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மணி மண்டபத்தின் கம்பம் ஒன்றில், ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத்தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது. இதை தட்டொளி என்பர்.

🌟 அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்கநாதர் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் உள்ளார்.



Share this valuable content with your friends


Tags

தேனை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனி ஓரை என்றால் என்ன? thiruvoomnam உலக மனிதநேய தினம் ஆடி வெள்ளிக்கிழமை இரவில் பல நாகங்கள் லக்னத்திலிருந்து 10ம் இடத்தில் சந்திரனும் வார ராசிபலன் (23.03.2020 - 29.03.2020) PDF வடிவில் !! இறந்தவர்களை அடிக்கடி கனவில் கண்டால் ஜூலை 02 முன்கோபம் உடையவர்கள் question மளிகை பொருட்களை திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கறி விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குளத்தில் மீன்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புது குடித்தனம் எந்த மாதத்தில் போகலாம்? benifits 19.10.2020 - 25.10.2020 Weekly rasipalan in PDF Format!! முதல் ஜாம பூஜை தொடங்குதல் கர்ப்பிணி பெண்களுக்கு புரட்டாசி மாதத்தில் சீமந்தம் வைக்கலாமா? lanavu