No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வைகுண்ட ஏகாதசி..!

Jan 06, 2020   Ananthi   283    ஆன்மிகம் 

🙏 மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி" உற்சவமாக கொண்டாட ஏற்பாடு செய்தார்.

🙏 ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும், உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உண்மையான உபவாசம் ஆகும்.

🙏 இத்தகைய பெருமைக்குரிய மார்கழி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லப்படுகின்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. ஆண்டுமுழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு வைகுண்ட ஏகாதசியான இன்று மட்டும்தான் திறந்து வைக்கப்படும். சொர்க்கவாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் பெருகும்.

🙏 விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க விஷ்ணுபகவான் ஒருவரே என்ற முடிவில் தேவர்கள் முறையிட, பெருமாள் அசுர சகோதரர்களுடன் போர் புரிந்தார். விஷ்ணுவிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

🙏 பகவானே! தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும் என்று கேட்டு வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள். இந்த அசுர சகோதரர்கள், தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.



Share this valuable content with your friends