No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மனநிம்மதி கிடைக்க ஆண்டாளை வணங்குங்கள்..!.

Dec 30, 2019   Ananthi   278    ஆன்மிகம் 

மனநிம்மதி கிடைக்க ஆண்டாளை வணங்குங்கள்..!

🙏 திருமாலை அன்றி ஒருவரையும் கணவராக ஏற்க மறுத்தவர் ஆண்டாள். அதற்காக பாவை நோன்பை மேற்கொண்டு, தன் விருப்பப்படியே திருமாலை மணம் புரிந்தவர்.

🙏 பாவை(பெண்) ஒருவர் பாடியதாலும், பெண்கள் இருக்கும் நோன்பைப் பற்றிய பாடல் என்பதாலும், ஆண்டாள் பாடிய பாடல் திருப்பாவை என்று பெயர் பெற்றது.

🙏 திருப்பாவை மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது. திருப்பாவையின் முதல் பாடலானது, திருப்பாவையின் தொகுப்பு பாடப்பட்டதற்கான நோக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் சுருக்கமாக அமைந்துள்ளது.

🙏 அதைத் தொடர்ந்து வரும் 2 முதல் 5 வரையுள்ள பாடல்கள், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள நாராயணரின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

🙏 ஆறு முதல் பதினைந்து வரையுள்ள துதிப்பாடல்கள், ஆழ்வார்களுக்கு ஒப்பாக, பெண் தோழியர்களை கற்பனை செய்து கொண்டு அவர்களை எழுப்பி, நீராடிவிட்டு கோவிலுக்கு செல்வதை சொல்கிறது.

🙏 அடுத்து வரும் பதினைந்து பாடல்களும், உன்னையே கணவனாக எண்ணிக் கொண்டுள்ள என்னை ஏற்றுக்கொள் என்று வெண்ணெய் உண்டவனை நினைத்து உருகிப்பாடுவதாக அமைந்திருக்கிறது.

மனநிம்மதி தரும் ஆண்டாள் :

🙏 இத்தனை பெருமைமிக்க ஆண்டாளாகிய மகாலட்சுமியிடம் நாம் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

🙏 ஆனால் செல்வம் இருந்தால் மனநிம்மதி கிடைத்துவிடுமா? அந்த நிம்மதியைத் தருபவர்தான் ஆண்டாள்.

🙏 ஆண்டாள் பூமாதேவியின் அவதாரம் என்பதால் பொறுமை குணம் வாய்ந்தவர். நாம் அறிந்தும், அறியாமலும் செய்கின்ற தவறுகளை உணர்ந்து ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டால் பகவானிடம் கூறாமல் மறைத்து விடுவார்.



Share this valuable content with your friends