No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

Aug 06, 2018   Ananthi   750    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟வாக்குவன்மையால் இலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟மனோதைரியம் உடையவர்கள்.

🌟உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் அமையும்.

🌟மனைவி மற்றும் மக்கள் பற்றிய கவலைகள் மனதில் இருக்கும்.

2. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று வேலையில் சேரலாமா?

🌟ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று வேலையில் சேரலாம்.

3. எனக்கு ராகு, கேது தோஷம் உள்ளதால் திருமணம் தடைபடுகிறது. திருமண தோஷம் நீங்க எந்த கோவிலிற்கு சென்று பரிகாரம் செய்வது நல்லது?

🌟சர்ப்பங்களை வழிபடவும்.

🌟சர்ப்ப சிலைகளை பிரதிஷ்டை செய்யலாம்.

🌟மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது சிறப்பாகும்.

🌟சர்ப்பங்களுக்கு அதிபதியான விநாயகரை வழிபடுவது சிறப்பாகும்.

4. எடுக்கும் வேலைகளை செய்ய முடியாமல் தடை வந்து கொண்டே இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

🌟வினைகளை தீர்க்கும் விநாயகரை வழிபடுவது சிறப்பாகும்.

🌟குலதெய்வ வழிபாடு மற்றும் பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பாகும்.

🌟இவற்றை செய்வதினால் தெய்வங்கள் ஆங்காங்கே மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவுவார்கள்.

5.சந்திராஷ்டமம் அன்று கடன் வாங்கலாமா?

🌟சந்திராஷ்டமம் அன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

6. லக்னத்தில் சுக்ரன் இருந்து பத்தாவது இடத்தில் சந்திரன் இருந்தால் அரசு வேலை கிடைக்குமா?

🌟இரு கிரகங்களின் நிலையினை மட்டும் கொண்டு ஒருவரின் தொழில் நிலையை முழுமையாக அறிய இயலாது.


Share this valuable content with your friends