No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நமது குடியிருப்பு பகுதியில் உள்ள அமைப்புகளும் அதன் தீய பலன்களும் !

Aug 06, 2018   Ananthi   467    வாஸ்து 

1. தென்கிழக்கு, கிழக்கு தெருகுத்து அல்லது தெருபார்வை வருவதால் ஏற்படும் பலன்கள் :

பெண்கள் உடல்நலம் கெடும், குடும்ப தலைவருக்கு விபத்து ஏற்படும். போலீஸ் கேஸ், கோர்ட் கேஸ், திருட்டு, தீவிபத்துக்கள் ஏற்படும். அரசாங்க வேலையிலிருந்தும் பிரச்சனையில் சிக்கி கொள்ளுதல், அடிக்கடி இடம் மாற்றுதல் ஏற்படுதல்.

2. தென்மேற்கு, தெற்கு பகுதியில் தெருகுத்து, தெருபார்வை வருவதால் ஏற்படும் பலன்கள் :

குடும்பத்தலைவி அல்லது மூன்றாவது வாரிசு நேரடியாக பாதிக்கப்படுதல், உடல்நலம் கெடுதல், விபத்து ஏற்படுதல், சில நேரங்களில் அகால மரணம் ஏற்படுதல் கணவன் மனைவி பிரிந்து வாழ்தல்.

3. தென்மேற்கு மேற்கு பகுதியில் தெருகுத்து, தெருபார்வை வருவதன் தீமைகள் :

குடும்பத்தலைவன் அல்லது இரண்டாவது வாரிசு அல்லது நான்காவது வாரிசு நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். தற்கொலை எண்ணம், விபத்து, திடீர் மரணம், கணவன் மனைவி பிரிந்து வாழ்தல்.

4. வடமேற்கு, வடக்கு பகுதியில் தெருகுத்து தெருபார்வை வருவதாலன் தீமைகள் :

உறவுகளில் விரிசல், செல்வாக்கு சீர்குழைவு. வீடு, இடம் கடனில் மூழ்கும் நிலை, சொத்து ஜப்தி நிலை, குழந்தை பாக்கியம் தள்ளி போகுதல், குழந்தை இல்லாமை, தத்து கொடுத்தல், தத்து எடுத்தல்.

5. நான்கு மூலையும் சதுரம், செவ்வகம் இல்லாமல், பலகோண அமைப்பில் வளர்ந்து இருந்தால் :

எதிலும் நிலையற்ற தன்மை, வீண் சண்டை, கண் எதிரே நஷ்டம், கட்டிய வீட்டில் யாரும் குடியேறாத நிலைமை, அரசாங்கத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுதல், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடப்பது போன்றவைகள்.

6. தென்கிழக்கு, கிழக்கு பகுதி வளர்ச்சியின் தீமைகள் :

தொடர்ந்து கெட்ட பெயர், இரண்டாவது வாரிசு பாதிக்கப்படுதல், பெண்கள் உடல் நலம் கெடும், வறுமை, நோய் போன்றவைகள்.

7. தென்கிழக்கு தெற்கு பகுதி வளர்ச்சியின் தீமைகள் :

திருட்டு, தீவிபத்து, மூன்றாவது வாரிசு பாதிக்கப்படுதல், வறுமை சேரும். பெண்களுக்கு உடல் நலம் கெடும். பெண்கள் மட்டுமே பாதிக்கப்படுதல்.

8. தென்மேற்கு, தெற்கு பகுதி வளர்ச்சியின் தீமைகள் :

பெண்கள் மட்டுமே பாதிக்கப்படுதல், விபத்து, தற்கொலை எண்ணம், திடீர் மரணம், குழந்தையின்மை, வறுமை, தீராத நோய், கர்ப்பப்பை சம்பந்தமான நோய், கெட்ட நடவடிக்கைகள்.

9. தென்மேற்கு, மேற்கு பகுதி வளர்ச்சியின் தீமைகள் :

விபத்து, மாரடைப்பு, தற்கொலை எண்ணம், முதுகு தண்டு வட பிரச்சனை, ஆண் சந்ததி மட்டுமே பாதிப்பு, பெண் சொத்தாக மாறிவிடுதல்.


Share this valuable content with your friends