1. ஆடி மாதத்தில் தாலி பிரித்து கோர்க்கலாமா?
🍁 ஆடி மாதத்தில் தாலி பிரித்து கோர்க்கலாம்.
🍁 எதன் மீதும் ஆசை கொள்ளாமல் கிடைப்பதை முழு மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டால் சுபிட்சமான வாழ்க்கை அமையும்.
2. காகம் எனது படுக்கை அறையை சுற்றி வந்தது. அதற்கு என்ன பலன்?
🍁 காகம் சனிபகவானின் வாகனம். காகம் வருவது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
🍁 மேலும், உடல்நலனில் கவனம் தேவை.
🍁 எதிர்பாராத செய்திகளால் தனவிரயம் உண்டாகும்.
🍁 வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
3. லக்னத்திற்கு 6ல் குரு இருந்து, திசை நடத்தினால் என்ன பலன்?
🍁 வம்பு, வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
🍁 திருமண வரன்கள் கைகூடும்.
🍁 கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
🍁 பணிபுரியும் இடங்களில் மனவருத்தங்களும், ஆதரவும் கிடைக்கும்.
4. குரு லக்னாதிபதியாகி அவர் 2ல் நீச்சமானால் என்ன பலனை தருவார்?
🍁 எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாகும்.
🍁 நிலையற்ற மனநிலை உண்டாகும்.
🍁 வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.
🍁 கல்வியில் தடுமாற்றமான சூழல் உண்டாகும்.
5. குபேர மூலை என்றால் என்ன?
🍁 குபேர மூலை என்பது வீட்டின் தென்மேற்கு மூலையாகும்.
6. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க தேவையான வழிமுறைகள் என்னென்ன?
🍁 கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் எந்த விதமான ஒளிவு மறைவுமின்றி இருத்தல் வேண்டும்.
🍁 ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
🍁 வீட்டின் அடிப்படை தேவைகள் மற்றும் ஆடம்பர தேவைகள் எவைகள் என இருவரும் உணர்ந்து அதற்கேற்றாற் போல் செயல்பட வேண்டும்.
🍁 வீட்டில் உள்ள பணிகளை இருவரும் சேர்ந்து செய்வது போன்ற செயல்களால் இல்லறம் நல்லறமாக விளங்கும்.
7. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய என்ன செய்ய வேண்டும்?
🍁 எண்ணமே நம் வாழ்க்கையாகும்.
🍁 எண்ணங்கள் தெளிவாகவும், உயர்வாகவும் இருக்கும் பட்சத்தில் நாம் எதிர்பார்க்கும் வாழ்க்கை உண்டாகும்.
🍁 எதன் மீதும் ஆசை கொள்ளாமல் கிடைப்பதை முழு மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டால் சுபிட்சமான வாழ்க்கை அமையும்.
8. பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா?
🍁 ஆண் வாரிசுகள் இல்லாத வீட்டில் பெண்கள் இருக்கும் பட்சத்தில் தாராளமாக தர்ப்பணம் கொடுக்கலாம்.