No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 01, 2018   Ananthi   455    நவ கிரகங்கள் 

🌟 மிதுன இராசியின் அதிபதி புதன் ஆவார். புதன் சந்திரனின் புத்திரர் ஆவார். தனது புத்திரனுடன் என்றும் நட்பு கொண்டு நற்செயல்களை செய்யக்கூடியவர். இதனால் உண்டாகும் சுப பலன்கள் பின்வருமாறு :

🌟 மென்மையான குணம் கொண்டவர்கள்.

🌟 அழகான சிரிப்பையும், பேச்சையும் கொண்டே சாதிக்க வல்லவர்கள்.

🌟 நுட்பமான செயல்பாடுகளால் எதிரிகளை வீழ்த்தக் கூடியவர்கள்.

🌟 எதைப் பற்றியும் கவலையோ, கலக்கமோ இல்லாமல் இருக்கக்கூடியவர்கள்.

🌟 நகைச்சுவையான பேச்சுகளால் அனைவரையும் ஈர்க்கக்கூடியவர்கள்.

🌟 வாதம் புரிவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் மட்டுமே.

🌟 எடுத்தச் செயலை முடிப்பதற்கு எவ்வழியிலும் செல்லக்கூடியவர்கள்.

🌟 கல்வி ஞானமும், புத்திசாலித்தனமும் உடையவர்கள்.

🌟 மறைமுக செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 அனைத்து விவரங்களையும் அறிந்தவர்கள்.

🌟 பிறரின் செலவுகளில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எவ்விதமான பிரச்சனைகளையும் பேசியே சமாளிக்கக் கூடியவர்கள்.

🌟 தன்னை நம்பியவர்களுக்கு தேவையானதை செய்யக்கூடியவர்கள்.

🌟 கணித ஞானமும், எதிர்காலம் பற்றிய சிந்தனைகளையும் கொண்டவர்கள்.


Share this valuable content with your friends