No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் எத்தனை காமாட்சி விளக்கு ஏற்றலாம்?

Jul 10, 2018   Suganya   974    ஜோதிடர் பதில்கள் 

1. காதல் திருமணத்தில் ஜாதகப் பொருத்தம் இல்லை என்றால் அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?

🌟 குலதெய்வ வழிபாடு செய்துவர மேன்மையான சூழல் அமையும்.

🌟 மேலும், திருமணப் பந்தத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லவும்.

2. சந்திர கிரகணம் அன்று வாஸ்து நாளும் வந்தால் அன்று வாஸ்து செய்யலாமா?

🌟 சந்திர கிரகணம் அன்று வாஸ்து நாளும் வந்தால் அன்று வாஸ்து செய்யலாம்.

3. வீட்டுவாசலில் சங்கு பதிப்பதன் அர்த்தம் என்ன? எத்தனை சங்கு பதிக்க வேண்டும்?

🌟 வீட்டுவாசலில் சங்கு பதிப்பதன் அர்த்தம் செல்வ வளத்தையும், சுபிட்சத்தையும் அளிக்கக்கூடியதாகும். ஒரு வலம்புரிச் சங்கு பதிப்பது சிறப்பாகும்.

4. பௌர்ணமி அன்று மொட்டை அடித்து, காது குத்தலாமா?

🌟 பௌர்ணமி என்பது சுப திதி அன்று மத்தியமான சுப திதி ஆகும். எனவே, பௌர்ணமி திதியை விடுத்து மற்ற திதிகளில் மேற்கொள்வது சுபிட்சமாகும்.

5. இரண்டு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்ச மாலை திருச்செந்தூர் கடலில் தொலைந்து போனது. இது நன்மையா? தீமையா?

🌟 ருத்ராட்ச மாலை திருச்செந்தூர் கடலில் தொலைந்து போனதால் எவ்விதமான பாதிப்பும் இல்லை. கவலைக்கொள்ள வேண்டாம். புதிய மாலையை வாங்கி அணிந்து கொள்ளவும்.

6. கண் திருஷ்டி பொம்மையை வீட்டில் எங்கு வைக்கலாம்?

🌟 கண் திருஷ்டி பொம்மைகளை வீட்டின் நிலை வாசலில் வெளியே நோக்கி வைப்பது சிறப்பாகும்.

7. என் தந்தை இறந்து எட்டு மாதம் ஆகிறது. கோவிலில் அர்ச்சனை செய்யலாமா?

🌟 தந்தை இறந்தால் ஒரு வருடம் வரை மலைக்கோவிலுக்கு செல்வதும், ஆலய திருப்பணிகளை தவிர்ப்பதும் நல்லது.

8. வீட்டில் எத்தனை காமாட்சி விளக்கு ஏற்றலாம்?

🌟 வீட்டில் இரண்டு காமாட்சி விளக்குகள் ஏற்றலாம்.


Share this valuable content with your friends