No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய்க்கிழமையில் வாகனம் எடுக்கலாமா?

Jul 06, 2018   Suganya   703    ஜோதிடர் பதில்கள் 

1. என்னுடைய ராசி துலாம் ராசி, எனக்கு சொந்த புத்தி கைக்கொடுக்குமா? சொல் புத்தி கைக்கொடுக்குமா?

🌟 துலாம் ராசி என்பது சர ராசியாகும். சொந்த புத்தி, சொல் புத்தி ஆகிய இரண்டும் கைக்கொடுக்கும்.

🌟 அதாவது ஒரு செயலை செய்வதற்கு முன் பலரிடம் ஆலோசனைகள் கேட்டு செயல்படுத்தும்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்களது முடிவுகளில் மாற்றம் செய்து நடைமுறைப்படுத்துவீர்கள்.

2. எந்தக்கிழமைகளில் கால சர்ப்ப தோஷ பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 கால சர்ப்ப தோஷ பரிகாரத்தை ஜென்ம நட்சத்திரம் வரும் கிழமை மற்றும் பஞ்சமியில் செய்வது சிறப்பான பலனை அளிக்கும்.

3. செவ்வாய்க்கிழமையில் வாகனம் எடுக்கலாமா?

🌟 செவ்வாய்க்கிழமைகளை விடுத்து வெள்ளிக்கிழமைகளில் வாகனம் எடுக்கலாம்.

4. விளக்கு தானாக அணைய வேண்டுமா? அல்லது நாம் தான் விளக்கை அணைக்க வேண்டுமா?

🌟 கோவிலில் ஏற்றிய விளக்குகள் தானாக அணையலாம்.

🌟 ஆனால், வீட்டில் ஏற்றிய விளக்கு தானாக அணையக்கூடாது.

5. ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே நட்சத்திரத்தில் உள்ள ஒரே பாதத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்ய வேண்டாம்.

🌟 ஒரே நட்சத்திரத்தில் வௌ;வேறு அதாவது ஒருவருக்கு அந்தமாகவும், மற்றொருவருக்கு ஆதியாகவும் இருக்க பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

6. 7ல் புதன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 ஒரே நேரத்தில் பல செயல்கள் செய்யும் திறமை கொண்டவர்கள்.

🌟 வாதத்திறமையில் வல்லவர்கள்.

🌟 வீடு, வாகன வசதி மேம்படும்.

🌟 விரும்பிய இடத்தில் மண வாழ்க்கை அமையும்.

7. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 திடமான உடல்வாகு உடையவராக இருப்பார்கள்.

🌟 கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

🌟 தைரியமானவர்களாக இருப்பார்கள்.

🌟 அமைதியான நடவடிக்கை உடையவர்கள்.

8. அமாவாசை விரதம் என்றால் என்ன?

🌟 அமாவாசையன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, வீடு முழுவதையும் கல் உப்பினை கலந்த நீரினால் சுத்தம் செய்ய வேண்டும்.

🌟 வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். பின் வீட்டின் அருகாமையிலுள்ள அல்லது மனதிற்கு பிடித்த கோவிலுக்கு சென்று வந்த பின்பு உணவு உண்ணவும்.

🌟 உடல் நிலைக்கு தகுந்தவாறு விரதத்தை கடைபிடிக்கவும்.

🌟 பின் பூண்டு, வெங்காயம் இல்லாத சாத்வீக உணவுகளை உண்ண வேண்டும்.

🌟 அமாவாசை தினங்களில் அசைவ உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது.


Share this valuable content with your friends