No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எந்தக்கிழமைகளில் முடி மற்றும் நகத்தை வெட்டலாம்?

Jul 07, 2018   Suganya   22128    ஜோதிடர் பதில்கள் 

1. எந்தக்கிழமைகளில் முடி மற்றும் நகத்தை வெட்டலாம்?

🌟 பிறந்த நாள், செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் முடி மற்றும் நகத்தை வெட்டலாம்.

2. அமாவாசைக்கு அடுத்த நாள் வெளியூர் பயணம் செல்லலாமா?

🌟 அமாவாசைக்கு அடுத்த நாள் வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்று. தவிர்க்க முடியாத காரணமாக இருக்கும் பட்சத்தில் சென்று வரவும். ஆனால், எதிர்பார்த்த காரியம் முடிவடைய காலதாமதமாகும்.

3. எண்ணெய் தேய்த்து குளிக்க எந்தக்கிழமை சிறந்தது?

🌟 ஆண்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை சிறந்தது.

🌟 பெண்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சிறந்ததாகும்.

4. மிதுன லக்னத்திற்கு 10ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அனைத்து கலைகளையும் கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 எதிர்பாலின மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

🌟 நண்பர்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 எப்போதும் ஏதாவது எண்ணங்களுடன் இருப்பார்கள்.

5. மேஷ லக்னத்தில் ராகு இருந்து, ஏழில் செவ்வாய் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 முன் கோபம் உடையவர்கள்.

🌟 அவசர குணம் உடையவர்கள்.

🌟 பிறர் யோசனையை ஏற்க மாட்டார்கள்.

🌟 மறைமுக நடவடிக்கை உடையவர்கள்.

🌟 அனைவரையும் பகைத்துக் கொள்வார்கள்.

6. ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ம் இடத்தில் சூரியன் தனித்து இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீக சொத்துக்கள் குறைவாக இருக்கும்.

🌟 பிறரின் செயல்பாடுகளில் குறைகளை காண்பவர்கள்.

🌟 சரியான முடிவுகளை எடுப்பதில் குழப்பம் உடையவர்கள்.

🌟 யாருக்கும் அடிபணிய மாட்டார்கள்.

7. ஜாதகத்தில் சனி 8ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 பார்வை குறைபாடுகள் ஏற்படும்.

🌟 வாக்கு பலிதம் நிறைந்தவர்கள்.

🌟 துணிவு மிகுந்தவர்கள்.

🌟 நிதானமான போக்கை உடையவர்கள்.

8. ஆடி மாதத்தில் வளைகாப்பு விழா நடத்தலாமா?

🌟 கருவுற்ற பெண்ணின் ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாவது மாதமாக ஆடி மாதம் இருக்கும் பட்சத்தில் வளைகாப்பு வைக்கலாம்.


Share this valuable content with your friends