No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசையில் திருஷ்டி கழிக்கலாமா?

Jul 06, 2018   Suganya   582    ஜோதிடர் பதில்கள் 

1. 7ல் செவ்வாய் மற்றும் கேது இணைந்து இருந்தால் என்ன பலன்?

🌟 அதிக கோபப்படக்கூடியவர்கள்.

🌟 சண்டை போடுவதில் வல்லவர்கள்.

🌟 அலைச்சல் அதிகம் கொண்டவர்கள்.

🌟 எதிர்பார்த்த திருமண வாழ்க்கை அமைய கால தாமதமாகும்.

2. எந்த மாதத்தில் குழந்தை பிறக்கலாம்?

🌟 எல்லா மாதத்திலும் குழந்தை பிறக்கலாம்.

🌟 குழந்தை பிறப்பிற்கு லக்னம் என்பதே முதன்மையானதாகும்.

3. லக்னத்திற்கு 11ம் இடத்தில் குரு, ராகு, புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 ரகசிய நடவடிக்கை உடையவர்கள்.

🌟 இசையின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 பலவகைகளில் இலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 தைரியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

4. பஞ்சாங்கம் என்றால் என்ன?

🌟 பஞ்சாங்கம் என்பது ஜோதிட கணிப்புகளுக்கு தேவையான பஞ்ச அங்கங்களை அதாவது ஐந்து அங்கங்கள் கொண்டதாகும்.

🌟 ஐந்து அங்கங்கள் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் ஆகும்.

5. அமாவாசையில் திருஷ்டி கழிக்கலாமா?

🌟 அமாவாசையில் திருஷ்டி கழிக்கலாம். மற்ற நாட்களை விட அமாவாசையில் செய்வது மிகச் சிறப்பாகும்.

6. வீட்டில் உள்ள பிரம்மாவின் படம் தீப்பற்றி எரிந்துவிட்டது. இதனால் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா?

🌟 வீட்டில் உள்ள பிரம்மாவின் படம் தீப்பற்றி எரிந்தால் இதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

🌟 கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளால் எந்தவிதமான பாதிப்பும் உண்டாகாது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

🌟 எரிந்த படத்தினை வீட்டில் வைக்காமல் அப்படத்தினை எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதை ஆற்றில் விடவும்.

🌟 புதிய படத்தினை வாங்கி வைத்து வழிபடவும்.

7. ஜோதிடத்தில் ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம் என்று சொல்கிறார்களே அது பற்றி எனக்கு தெளிவாக கூறவும்.

🌟 ஒரு ராசி என்பது முப்பது பாகைகள் கொண்டதாகும். பனிரெண்டு ராசிகள் வீதம் மொத்தம் முந்நூற்றி அறுபது பாகைகள் உடையது.

🌟 இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் பனிரெண்டு ராசிகளுக்கும் சம விகிதத்தில் பிரித்து கொடுக்க ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

🌟 இருபத்தி ஏழு நட்சத்திரங்களை நான்கு பாதகங்களாக பிரிக்கும்போது மொத்தம் 108 பாதங்கள் ஆகும்.

🌟 இந்த 108 பாதங்கள் சமமாக பங்கிடும் போது ஒவ்வொரு ராசிகளும் ஒன்பது பாதங்களை கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது.

🌟 ஒரு ராசியின் மொத்த பாகையை ஒன்பதால் வகுக்க கிடைப்பது அதாவது ஒரு நட்சத்திர பாதத்தின் அளவு 13 பாகை இருபது கலை ஆகும்.

🌟 எனவேதான், சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சாரம் செய்கிறார்.


Share this valuable content with your friends


Tags

ஏப்ரல் 05 பற்றி எரியும் நெருப்பிற்கு இடையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பௌர்ணமி சமுதாயத்திற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள் இவர்களே! கோவிலுக்கு சென்றவுடன் செய்ய வேண்டியவைகள் என்ன? செய்யக்கூடாதவைகள் என்ன? புதன் மற்றும் குரு இணைந்திருந்தால் என்ன பலன்? மாசி அருவி மற்றும் ஆறுகளை கனவில் கண்டால் என்ன பலன்? ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? வாசலில் நாய் குரைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெளியூருக்கு சென்று கூட்டத்தில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 19.08.2019 Rasipalan in pdf format!! 09.02.2023 ராசிபலன் ருத்ராட்சத்தை தங்கத்தில் கோர்க்கலாமா? தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நபரை வீட்டிற்கு அழைத்து வருவது போல் கனவு கண்டால் iraddai suli place பெருமாள் கோவிலையும் கனவில் கண்டால் என்ன பலன்? கிணற்றில் தண்ணீர் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சஷ்டி திதி