நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்போம். அதேபோல்தான் ஒரு மனிதன் நோய் இல்லாமல் இருப்பதே உண்மையான செல்வந்தர்.
மனிதனின் ராஜ உறுப்புகளில் ஒன்றான கிட்னி அதாவது சிறுநீரகம் செயல்படாமல் போவதற்கு அவர்களின் வீட்டு அமைப்பில் எங்கு தவறு இருந்தால் இதுபோல் பிரச்சனை வரும்.
1. கட்டிடம் சதுரம், செவ்வகம் இல்லாமல் L , G , A வடிவில் இருப்பது.
2. நான்குபுறமும் காம்பவுண்ட் இல்லாதிருத்தல்.
3. தென்மேற்கில் பெட்ரூம்மாக இல்லாமல் Hall, Kitchen, குடோன், சமையலறை, கழிவறை, மாடிபடி போன்ற அமைப்புகள் இருப்பது.
4. தென்மேற்கில் தண்ணீர் தொட்டி அமைப்பு, கழிவுநீர் தொட்டி அமைப்பு.
5. தென்மேற்கில் உள்முனை படி அமைப்பு.
6. தென்மேற்கில் வீட்டிற்கு வெளிபுறத்தில் உயரமான தண்ணீர்தொட்டி அமைப்புகள்.
7. தெற்கு நடுப்பகுதியில், வீட்டிற்கு தெற்கு பகுதியில் கிணறு, ஓடை, சிறு வாய்க்கால், ஆறு போன்றவைகள் வருவது.
8. தென்மேற்கில் கிணறு, ஆறு, ஓடை, குளம், குட்டை, சிறு வாய்க்கால் போன்ற அமைப்புகள் வருவது.
9. தென்மேற்கு இருபுறமும் தெருகுத்து, தெருபார்வை வருவது.
10. தென்கிழக்கு தெருகுத்து வருவது.
11. வடமேற்கில் வடக்கு தெருகுத்து வருவது.
12. தென்கிழக்கு கிழக்கில் முக்கிய வாசல், கேட் வருவது.
13. வடமேற்கு வடக்கில் முக்கிய வாசல், கேட் வருவது.
14. தென்மேற்கு வீட்டினுள் பூஜையறை வருவது.
15. தென்மேற்கில் தெற்கு அல்லது மேற்கு வாசல்.
இந்த இயற்கை பல நேரங்களில் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே வரும் அதுபோல் தான் இந்த கிட்னி பிரச்சனையும், தவறான வீட்டு அமைப்பு என்று தெரிந்தால் உடனடியாக வீட்டை மாற்றி கொள்வது ஒரு நீண்ட ஆயுளுக்கான வழிமுறையாகும்.