No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தெருகுத்து வருவதை எவ்வாறு கண்டறிவது?

Jul 06, 2018   Dharani   1743    வாஸ்து 

வடக்கு மற்றும் கிழக்கு தெருகுத்து :

ஒரு வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்கு தெருகுத்து என்பது மிக உன்னதமானது. இதுபோல் தெருகுத்து வருமானால் அவர்களால் அவர்களின் தொழிலின் மூலம் 30மூ உழைப்புக்கு மேல் போனஸாக கிடைக்கும்.

தென்கிழக்கில் தெற்கு தெருகுத்து :

இதுபோல தெருகுத்து ஒரு வீட்டிற்கு வருமானால், அவர்கள் செய்யக்கூடிய தொழிலுக்கு நிறைய கூட்டம் வந்து செல்வார்கள். அதாவது நிறைய வாடிக்கையாளர்கள் வந்து போவார்கள். இதுவும் உழைப்புக்குமேல் ஒருவகையான போனஸ் தான்.

வடமேற்கில் மேற்கு தெருகுத்து :

இதுபோல தெருகுத்து உள்ள இடத்தில் ஒருவரது வீடு அமைந்தாலும், தொழில் நிறுவனங்கள் அமைந்தாலும் உழைப்புக்கு மேல் 100மூ பலன் கிடைக்கும். இதுபோல தெருகுத்து, தெருபார்வை அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைவதில்லை.

வடமேற்கு - வடக்கு

தென்கிழக்கு - கிழக்கு

தென்மேற்கு - தெற்கு

தென்மேற்கு - மேற்கு

இந்த நான்கு பகுதியிலும் தெருகுத்து, தெருபார்வை வராமல் பார்த்து கொள்ள வேண்டும். இவைகள் மிக மிக ஆபத்தானவைகள். ஒரு வேலை நீங்கள் வாங்கிய இடத்தில் இதுபோல தெரு அமைப்பு இருக்குமேயானால் இந்த பிரச்சனைகள் ஏற்படும்.

இடம் வாங்கும்போதே அவர்கள் எந்த காரணத்திற்காக விற்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

வீடு கட்டும் போது பல முறை தடைகள் ஏற்படும்.

வீட்டின் மீது கடன் வாங்க நேரிடும்.

ஏசுளு வாங்குதல்.

தொழில் நஷ்டத்திற்கு சென்று விடும் அல்லது நஷ்டப்படுத்தி விடும்.

ஜாமீன், கோர்ட், கேஸ் போன்றவை திடீரென ஏற்படும்.

கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும்.

ஆண்கள் விபத்தில் சிக்கிக் கொள்வார்கள்.

கிட்னி, பித்தப்பை, முதுகுதண்டுவடம், பெண்களுக்கு கர்பப்பை போன்ற இடங்களில் பிரச்சனை ஏற்படும்.

காதல் திருமணம் செய்து கொள்வது.

மதம் மாறி திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள்.

வேலையில் மாற்றம் (அ) பணியிடை மாற்றம்.

ஆண்களுக்கு இடது காலிலும், பெண்களுக்கு இடது கையிலும் முறிவு ஏற்படும்.

இதய பிரச்சனை, ஸ்டோக், பிரஷர் இவைகள் போல இன்னும் குறிப்பிடும் படியான பிரச்சனைகள் உண்டு.


Share this valuable content with your friends