No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதிய வீடு கட்டும்போது காம்பவுண்ட் சுவர் அவசியமா?

Jul 05, 2018   Dharani   626    வாஸ்து 

புதிய வீடு கட்டுவதற்கு காம்பவுண்ட் போடுவது அவசியமே. ஏனெனில் காம்பவுண்ட் என்பது ஒரு வீட்டின் பாதுகாப்பு வேலி ஆகும். அது மட்டுமின்றி காம்பவுண்டை அந்த வீட்டினுடைய தந்தை சுவர் என்றும் கூறுவர்.

நாம் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் போது பக்கத்து வீட்டினருடன் தொடர்புக்கொண்டு பொதுக் காம்பவுண்ட் சுவர்களாக அமைக்கக்கூடாது. நம் காம்பவுண்ட் சுவருடன் பக்கத்து வீட்டின் போர், கிணறு, வாசல், தண்ணீர்த்தொட்டி, படி, போர்டிகோ அமைப்பு என அனைத்தும் தொடர்பு கொண்டது.

காம்பவுண்ட் சுவர் சரியாக இல்லாததால் ஏற்படும் விளைவுகள் :

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்.

உயிர் இழப்புகள் ஏற்படலாம்.

மேலும் திருமண தடைகள் ஏற்படும்.

கடன் பிரச்சனைகள் மற்றும் விபத்துக்கள் நிகழும்.

வேலை தடைப்படும்.

எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்காது.

கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க இயலாது.

காம்பவுண்ட் சுவர் அமைக்கும் முறைகள் :

இந்த பெரிய பிரபஞ்சத்தில் நமது இடம் என்பது நாம் காம்பவுண்ட் அமைத்தால் மட்டுமே அது நமக்கு உரிமை ஆகும். அந்த இடம் மட்டுமே நமக்கு வாஸ்து பேசும். அது யாருடைய பெயரில் இருந்தாலும் பிரச்சனைகள் கிடையாது.

முதலில் பூமி பூஜை போட்டு அடுத்து பில்லர் போட்ட பிறகு அதை பேஸ் அளவில் நிறுத்த வேண்டும். பின்னர் நான்கு மூலைகளிலும் காம்பவுண்டுக்குரிய சுவரினை எழுப்ப வேண்டும். பிறகு அஸ்திவாரம் எடுத்து கருங்கற்களால் சுவரினை எழுப்ப வேண்டும். பிறகு காம்பவுண்டுக்கும் பேஸ் மட்டத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை மண்களால் நிரப்ப வேண்டும்.

முதலிலேயே காம்பவுண்ட் சுவரினை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. கருங்கல் மட்டதுடன் நிறுத்தினாலே போதுமானதாகும். அஸ்திவாரம் மட்டும் போட்டாலே போதுமானதாகும். பிறகு சுவரினை எழுப்பிய பின்னர் மதிலை எழுப்பினால் போதும். இவ்வாறு அமைப்பதன் மூலமாக நமது வீட்டின் பாதிப்புகளை தவிர்க்கலாம்.


Share this valuable content with your friends


Tags

சுசீலா நல்ல பாம்பை அடிப்பது போலவும் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 வீட்டின் எந்த திசையில் சாமி படம் வைத்து வழிபடலாம்? 29.10.2018 - 04.11.2018 Rasipalan in PDF format !! ஐயப்பன் ஆபரணம் பூணுவது ஏன்? கும்பம் panam லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? குழந்தைகளுக்கான நூல்களை எழுதி உலக அளவில் புகழ்பெற்ற எனிட் பிளைட்டன் நவம்பர் 04 வாசற்படி அமைப்பு சித்ரகுப்தன் இறந்த நண்பனுடன் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? today horoscope 25.03.2020 in pdf format அவர்களை ஏன் இங்கு இருக்கிறீர்கள் என்று திட்டும் போது பின்னிருந்து யாரோ என் காலை பிடித்து இழுப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? காதலியை கனவில் கண்டால் என்ன பலன்? குன்று இருப்பது நல்லதா? தேள் jothider question and answer