No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்திற்கு ஏழில் கேது இருந்தால் தோஷமா?

Jul 02, 2018   Suganya   642    ஜோதிடர் பதில்கள் 

1. இரண்டாவதாக என் மனைவி கர்ப்பம் தரித்துள்ளாள். இது என் மனைவிக்கு 6ஆவது மாதம். எப்போது வளைகாப்பு வைக்கலாம்?

🌀 வளைகாப்பு என்பது கருவுற்ற பெண்ணின் ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் செய்வது சிறப்பாகும்.

🌀 மேலும், இரட்டைப்படை மாதங்களை விடுத்து ஒற்றைப்படை மாதத்தில் செய்யவும்.

2. எனக்கு திருமணப்பொருத்தத்தில் ஐந்து பொருத்தம் உள்ளது. இது சரி வருமா?

🌀 பாவக ரீதியான ஆய்வுகள் மற்றும் முக்கியமான பொருத்தங்கள் கூடி வருமாயின் திருமணம் செய்து கொள்ளலாம்.

3. தினமும் கோச்சாரப்படி ஜோதிடம் டிவியில் பலன் சொல்கிறார்கள். அதன்படி 12 மணிநேர பின்னர் வரும் அமெரிக்க மக்களுக்கும் இது பொருந்துமா?

🌀 கோச்சார பலனில் சிறிது வேறுபாடுகள் உண்டாகும்.

🌀 நட்சத்திரங்களின் ஆதி அந்த நேரம் மாறுபடும். எனவே, பலன்களும் மாறுபடும்.

4. எனக்கு திருமணம் முடிந்து 1 வருடம் 4 மாதம் ஆகிறது. ஆனால், இன்னும் குழந்தை இல்லை எனது ராசி மீனம், லக்னம் மீனம், நட்சத்திரம் உத்திராட்டாதி. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌀 வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை குரு ஓரையில் வணங்கி வரவும்.

🌀 வயதில் மூத்த உறவினர் அல்லாத பெரியோருக்கு தேவையான உதவிகளை செய்து வரவும்.

🌀 மேலும், பண வசதியில்லாத கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்கள் வசதிக்கு ஏற்ப உதவி செய்து வரவும்.

5. ரிஷப ராசி, மிருகசீரிஷம் நட்சத்திரம் உள்ள நான், நன்றாக படிக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

🌀 மாணவர்கள் ஹயக்கிரிவரையும், சரஸ்வதி தேவியையும் வணங்கி வர கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

6. இறந்தவர் போட்டோ திடீரென்று கீழே விழுந்து நொறுங்கினால் என்ன பலன்?

🌀 இறந்தவர் போட்டோ திடீரென்று கீழே விழுந்து நொறுங்கினால் அமாவாசையன்று அவருக்கு தர்ப்பணம் அளித்து வரவும்.

🌀 மேலும், குலதெய்வ கோவிலிற்கு சென்று வழிபட்டு வரவும்.

7. அம்மன் கழுத்தில் நாங்கள் போட்ட தாலி தொலைந்து விட்டது. இதனால் குடும்பத்தில் கஷ்டம் வருமா?

🌀 அம்மன் கழுத்தில் நாங்கள் போட்ட தாலி தொலைந்து விட்டதால் எவ்விதமான பாதிப்பும் இல்லை.

🌀 மேற்கொண்டு இது நிகழாமல் கவனத்துடன் இருக்கவும்.

8. லக்னத்திற்கு ஏழில் கேது இருந்தால் தோஷமா?

🌀 லக்னத்திற்கு ஏழில் கேது இருந்தால் தோஷமாகும்.



Share this valuable content with your friends


Tags

SLIVER யாழிசை போட்டி 07.08.2020 rasipalan in pdf format அஸ்தங்கம் அடைந்த கிரகம் நன்மை செய்யுமா? 14.08.2020 rasipalan in pdf format ஆடி அமாவாசை பெற்றோர் சாபம் 19.10.2020 rasipalan in PDF Format!! பூமி பூஜை போடுவது வார ராசிபலன் (27.07.2020 -02.08.2020) ரயில் தண்டவாளத்தை கனவில் கண்டால் என்ன பலன்? எனது தோழி வெளிநாடு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? சர்க்கரை விற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவர்கள் முன்னிலையில் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சித்திரை மாதம் ஆண் குழந்தை பிறந்தால் தீமையா? கேதுபகவான் இங்கு இருந்தால்... வெளிநாட்டு யோகத்தை வழங்குவார்..!! ஈசானிய மூலையில் படிக்கும் அறையை அமைக்கலாமா? ஏப்ரல் 09 paanai ஆணுடைய ராசிக்கு 8வதாக இருந்தால் திருமணம் செய்யலாமா?