1. கனவில் ஒருவர் உதவியாக கொல்லிவைக்க வேண்டும் என்று கேட்டதால் அவருக்கு நான் கொல்லிவைத்தேன். இது நன்மையா? தீமையா?
🌀 இந்த மாதிரி கனவு கண்டால் நன்மை உண்டாகும்.
🌀 மேலும், சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.
2. கனவில் கப்பலை கண்டால் என்ன பலன்?
🌀 கனவில் கப்பலை கண்டால் வாழ்க்கையில் தனவரவுகள் மேம்படும்.
3. பெரிய மீனை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌀 பெரிய மீனை பிடிப்பது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.
🌀 மேலும், எண்ணிய காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
4. கர்ப்பமாக இருப்பது போல் அடிக்கடி கனவு வந்தால் என்ன பலன்?
🌀 கர்ப்பமாக இருப்பது போல் அடிக்கடி கனவு வந்தால் புதிய நபர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.
5. இன்னும் கொஞ்ச நாள் மட்டும் உயிர் வாழ்வேன் என்று ஒருவர் சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌀 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயலால் பிறரின் மனம் துன்பப்படும் என்பதை உணர்த்துகிறது.
6. பாம்பிற்கு மீனை உணவாகவும் மற்றும் பூனைக்கும் காக்கைக்கும் உணவு கொடுப்பதாகவும் கனவு கண்டால் என்ன பலன்?
🌀 பாம்பிற்கு மீனை உணவாகவும் மற்றும் பூனைக்கும் காக்கைக்கும் உணவு கொடுப்பதாகவும் கனவு கண்டால் போட்டிகள் அதிகரிக்கும்.
🌀 கூட்டாளிகளிடமும், சக பணியாளர்களிடமும் நிதானத்துடன் செயல்படவும்.
7. அடிக்கடி ஆண் குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?
🌀 அடிக்கடி ஆண் குழந்தையை கனவில் கண்டால் வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் மேம்படும்.
8. கனவில் வருபவர்கள் எல்லோருக்கும் திருமணம் நடப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
🌀 கனவில் வருபவர்கள் எல்லோருக்கும் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.