No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 28, 2018   Suganya   42734    கனவு பலன்கள் 

1. சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாமி ஆடுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வீர்கள்.

2. கோவிலுக்கு பால் குடம் எடுப்பது போலவும், ஆனால் பாதியிலேயே திரும்பி விடுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எடுத்த செயலில் எதிர்பார்த்த இலாபம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

3. வெள்ளை குரங்கு கார் விபத்தில் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குரங்கு இறப்பது போல் கனவு கண்டால் எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும்.

4. முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவு உண்டாகும்.

5. என்னுடைய தாத்தா உடம்பில் பூணூல் அணிந்து கொண்டு, மேச்சல் நிலத்தில் இருந்து நான்கு வெள்ளை மாடுகளை பிடித்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் சம்பந்தமான பணிகளில் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

6. மாட்டிற்கு நீர் எடுத்து செல்லும் வழியில், ஒரு கிணற்றில் நீர் மேலே உள்ளது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு காண்பது செய்யும் முயற்சிகளால் எதிர்பார்த்த பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

7. நான் கடந்து செல்லும் வழியில் நாகம் என்னை கண்டதும் ஒற்றை தலையில் இருந்து, ஜந்து தலை நாகமாக மாறி என் தலைக்கு மேல் படம் எடுக்கிறது. நான் பயந்து ஒரு மாந்தோட்டத்திற்கு ஓடி வருகிறேன். அந்த பாம்பு மறுபடியும் ஒற்றை தலை நாகமாக என்னை நோக்கி வந்து என் காலுக்கு அடியில் வந்து மறைந்து விட்டது. இது நல்லதா? கெட்டதா?

🌟 இந்த மாதிரி காண்பது தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சில இடர்பாடுகளும், மாற்றமான நிலையும் ஏற்பட்டாலும் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

8. என் கனவில் என் மாமா வீட்டின் ஒரு பகுதியை கோவில் அமைக்க கொடுத்துவிட்டார். கோவிலும் கட்டிவிட்டார்கள் அந்த கோவிலில் ஒரு பெண் கடவுள் அலங்காரத்துடன் வீற்றிருக்கிறார். அங்கு குளம் ஒன்று உள்ளது. எல்லா பக்தர்களும் அதிலுள்ள ஒரு பறவைக்கு தீனி போடுகிறார்கள், என் மாமாவும் போடுகிறார் அது கையில் வந்து எடுத்துகொள்கிறது. இந்த கனவு காலை 5 மணி அளவில் வந்தது. இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களால் இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக கொசு ஒழிப்பு தினம் மழையில் நனைந்து விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பழுத்த பழங்களை எடுப்பது போல் கனவு அடுக்கு அரளிப்பூ செடியை வீட்டில் வைக்கலாமா? இன்றைய வரலாறு - ஜூலை 14 அடிக்கடி விபத்து ஏற்பட காரணமான அமைப்புகள் என்னென்ன? தனுசு லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்? naval tree எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள் செவ்வாய் 04.09.2018 Rasipalan பலன்கள் jothider question oand answer கோவிலில் இருக்கும்போது பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஏழரை சனி நடைபெறும் காலங்களில் திருமணம் செய்யலாமா? ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் பிரபலமானவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்? வெல்லம் வாங்குவது போல் கனவு கண்டால் vaasuki