No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம் : மாறுவேடத்தில் தேவர்களுடன் இருந்த அசுரன்..! பாகம் - 38

Jun 28, 2018   Vahini   591    சிவபுராணம் 

எம்பெருமானான சிவபெருமானுக்கு பார்வதி தேவியின் ஒவ்வொரு செயலாலும் அவர் மீது கொண்ட சினம் குறைந்து கொண்டே இருந்தன. ஏனெனில், பார்வதி தேவியின் ஒவ்வொரு செயல்களும் சதியின் செயல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன.

நாராயணன் சிவபெருமான் முன் தோன்றி, வணங்கி பார்வதி தேவிக்கு தான் உதவியதை பற்றி கூறினார். ஆனால், தேவியோ இனி மேற்கொண்டு தனக்கு உதவ வேண்டாம் என்று தன்னிடம் கூறிவிட்டார். அதனால், இனி தாங்கள் மேற்கொண்டு தேவிக்கு எவ்விதமான இன்னல்களையும் தோற்றுவிக்க வேண்டாம் எனக் கூறினார் நாராயணன். ஏனெனில், பார்வதி தேவி என் சகோதரி என்று கூறினார்.

சுக்கிராச்சாரியார் தனது சீடர்களில் சிறந்தவரான தாரகாசுரனின் கோரிக்கையை ஏற்று அசுரர்களில் ஒருவரை தேவராக மாற்றி தேவர்கள் உள்ள சிறைக்கு சென்று அங்கு நிகழ்வனவற்றை அறிந்து வருவாயாக எனக் கூறினார்.

பின்பு குருவிடமும், தனது குலவேந்தரான தாரகாசுரனிடமும் ஆசி பெற்று ஒற்றர் பணியை செவ்வனே செய்ய சென்றான் தேவ உருவத்தில் இருந்த அசுரன்.

எம்பெருமானான சிவபெருமான் நாராயணனிடம் யாம் அளிக்கும் இன்னல்கள் யாவும் பார்வதி தேவிக்கு முந்தைய பிறவிகளில் இளைத்த தவறில் இருந்து எது சரியானது? எது அனர்த்தம்? என புரியும் வண்ணம் அமையும்.

ஏனெனில், பார்வதி தேவி என்னில் சரிபாதி. பார்வதி தேவி தான் யாரென்று அறியும் பொருட்டு என் சோதனைகள் யாவும் தொடரும் என கூறினார்.

பார்வதி தேவி, இன்னல்களுக்கு ஆட்படும் போது தன்னுள் இருக்கும் சக்தியை அவரால் உணர இயலும். ஏனெனில், என்னில் பாதியான பார்வதி தேவி தான் யார் என்று அவர்கள் உணர்தல் மிகவும் அவசியமாகும் என சிவபெருமான் நாராயணணிடம் கூறினார்.

நாராயணன் புன்முறுவலுடன் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் மகாதேவரே எனக் கூறினார். ஏனெனில் என் சகோதரியான பார்வதி தேவியை என்னில் பாதி என தாங்கள் கூறியமைக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.

மேலும், தாங்கள் யோகி வடிவம் விடுத்து தம்பதியாவீர்கள் என கூறினார். இனி இந்த பிரபஞ்சம் புதியதொரு மையலை கண்டு புத்துணர்ச்சி அடைந்து செழுமை பெறும் என்று கூறினார்.

எம்பெருமானான சிவபெருமான் இவையாவும் கேட்டு அமைதி கொண்டு இருந்தார். தேவி பார்வதி தன்னை உணரும் பட்சத்தில் எடுத்த எண்ணத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே என்னை அடைய இயலும் நாராயணா! இதை என்றும் தாங்கள் நினைவிற் கொள்ள வேண்டும் என்றார்.

ஆனால், நாராயணனோ எவ்விதமான ஐயமின்றி என் சகோதரி தங்களின் பதியாவார் என்று கூறி தான் விடை பெற அனுமதி பெற்று அவ்விடத்தை விட்டு மறைந்துச் சென்றார்.

மாறுவேடத்தில் இருந்த அசுரன், அடைத்து வைக்கப்பட்ட தேவர்கள் இருந்த சிறைக்கு சென்று அங்குள்ள தேவர்களின் ஒருவராக நின்று, அவர்களின் பேச்சை கவனித்தான்.

இருப்பினும் தேவர்கள் யாவரும் உரைக்காமல் அமைதிக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் பேச்சை தொடர்வதற்காக சர்வம் படைத்த சர்வேஸ்வரா நாங்கள் அடையும் இன்னல்களை தாங்கள் இன்னும் அறியவில்லையா?. எப்பொழுது நாங்கள் இந்த சிறையில் இருந்து வெளியேறுவோம் என தேவ ரூபத்தில் இருந்த அசுரன் கூறினார்.

ஆனால், அசுரன் எதிர்பார்த்த எவ்விதமான தகவல்களும் அவருக்கு கிடைக்கவில்லை. மாறாக அமைதி மட்டுமே அவருக்கு பதிலாக கிடைத்தது. சிறையில் இருந்த தேவர்களுக்கு தாரகாசுரனால் ஏற்பட்ட இன்னல்கள் எண்ணிலடங்கா வகையில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. தேவர்களோ! மகாதேவரை வேண்டி நின்றனர். மகாதேவரோ யாவும் உணர்ந்தவராக அமைதி காத்தார். ஏனெனில், தேவி பார்வதி தன்னை உணராமல் இருப்பதாக அறிந்தார்.

குடில் கொண்டுள்ள இடத்தின் அருகில் தான் வைத்துள்ள எம்பெருமானான சிவபெருமானின் சிலைகளை கையில் ஏந்திய வண்ணம் தவம் புரிவதற்காக மலையில் யாவரின் நடமாட்டமும் இல்லாத அமைதியான ஓர் இடத்தை தேடி சென்றார்.

அவ்விதம் செல்லும் வகையில் தேவி பார்வதி அலங்கார திருமேனியுடன் காணப்பட்டார். கைகளில் லிங்கம் இருக்கும் பட்சத்தில் சிவபெருமானுக்கு பூஜை செய்வதற்கான பூக்களை பறிக்க இயலவில்லை. எனவே, லிங்கத்தை ஒரு பாறையின் மீது வைத்து மலர்களை பறிக்க சென்றார்.

எம்பெருமானான சிவபெருமானுக்கு பூஜை செய்வதற்கான மலர்களை பறித்த மகிழ்ச்சியில் தான் வைத்திருந்த சிவலிங்கத்தை எடுக்க முற்படுகையில் முனிவர்கள் சிலர் எம்பெருமானை வழிபட்டு கொண்டு இருந்தனர். அதனால், அவர்களின் பிரார்த்தனைகள் முடியும் வரை பார்வதி தேவி அமைதி காத்தார்.


Share this valuable content with your friends