No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம் : லிங்கத்தை எடுத்துச் செல்ல காத்துக் கொண்டுள்ள பார்வதி தேவி! பாகம் - 39

Jun 28, 2018   Vahini   553    சிவபுராணம் 

பார்வதி தேவியை கண்டு வழிபட்டுக் கொண்டிருந்த முனிவர்களில் ஒருவர் தாங்கள் யார் தேவி?. யாரேனும் வரவேண்டி காத்து உள்ளீர்களா? என வினவினார். முனிவர் பெருமக்களுக்கு எனது கனிவான வணக்கங்கள். நான் எனது லிங்கத்தை எடுத்து செல்வதற்காகவே இங்கு காத்துள்ளேன் என்று பார்வதி தேவி கூறினார்.

மேலும், தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேற எவ்வளவு காலம் ஆகும் என வினவினார் தேவி பார்வதி. வழிபட்டு கொண்டிருந்த முனிவர்களில் ஒருவர், முனிவர்கள் இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்ய கால நேரம் என்பது இல்லை தேவி.

எங்களின் பிரார்த்தனைகள் நிறைவு பெறதான் கால நேரங்கள் ஆகும் என மூத்த வயோதிக முனிவர் கூறினார். ஆனால், தேவி தான் கொண்டு வந்த லிங்கத்தை எடுத்து செல்ல அனுமதி வேண்டினார்.

சக்கரங்கள் அமைந்துள்ள இடங்கள் :

மூலாதாரம் = முதுகெலும்பின் அடிப்பகுதியில் இருப்பது.

சுவாதி ஸ்டானம் = தொப்புளுக்கு சிறிது கீழாக அமைந்துள்ளது.

மணிபூரகம் = தொப்புளுக்கு சற்று மேலாக அமைந்துள்ளது.

அனாகதம் = மார்பின் மையத்தில் அமைந்துள்ளது.

விசுத்தி = தொண்டை பகுதியில் அமைந்துள்ளது.

ஆக்ஞா = நெற்றியின் இருபுருவங்களுக்கு மத்தியில் இருப்பது.

சகஸ்ஹாரம் = தலையின் உச்சிப் பகுதியில் அமைந்துள்ளது.

ஆனால், அந்த வயோதிக முனிவர் எம்பெருமானான சிவபெருமானை வழிபட்டு எண்ணியவற்றை நாம் அடைய வேண்டுமாயின் உயிர்கள் இந்த கலாதியுடைய இந்த பூவுலகில் நாம் பலவற்றை விட்டுச் சென்றால் மட்டுமே நாம் இறைவனின் திருவடிகளை நம்மால் காண இயலும்.

அதில் மிக முக்கியமானது நான் என்னும் அகந்தையாகும். ஏனென்றால், இந்த பிரபஞ்சம், நான் தான் எல்லாம் என்று எண்ணி தன்னிடத்தில் உள்ள சக்திகளை தன்னகத்தே வைத்துக் கொண்டால் இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய உயிர்களின் நிலைகள் என்னவென்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

எனவே தான் இந்த பிரபஞ்சம், நான் என்றும் இருமாப்பை விடுத்து அனைவருக்கும் பொதுவானவன் என உணர்ந்த காரணத்தாலே இன்றளவும் அளவிட முடியாத சக்திகளை கொண்டுள்ளது. இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்து இங்கு எங்கும் நிறைந்திருக்கும் எம்பெருமானான சிவபெருமானை அடைவது நான் என்ற குறுகிய வட்டத்தை விடுத்து அனைவருக்கும் பொதுவானவர் என்று உணரும் பட்சத்தில் எம்பெருமான் திருவடியை நம்மால் அடைய இயலும் தேவி என்று முனிவர் கூறினார்.

முனிவரின் கூற்றுகளை ஏற்றுக்கொண்ட தேவி என்னுடைய பிழையை சுட்டிக்காட்டி என்னை திருத்தி செம்மைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி எனக் கூறினார். தங்களுடைய பிரார்த்தனைகள் யாவும் நிறைவு பெறும் பொருட்டு நான் அமைதிக்கொண்டு காத்திருக்கின்றேன் என கூறினார். மேலும், தங்களின் வழிபடும் முறையை காண அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறி பணிந்து நின்றார். முனிவர்களும் வழிபாட்டினை காண அனுமதி அளித்தனர். பின் தேவியானவர் தனிமையில் நின்று எவருக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அவர்களின் வழிபாட்டை கண்டு கொண்டு இருந்தார்.

ஆனால், இவர்களின் வழிபாடுகள் சாமானிய மக்களின் வழிபாடு முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இதுவரை அமைதி காத்து பொறுமையுடன் இருந்து வந்த தேவி, இவர்கள் இறுதியாக இறைவனான எம்பெருமானுக்கு படைக்க மாமிசத்தை எடுத்து லிங்கத்தின் அருகில் வைக்க முற்படுகையில் தேவியானவர் சினம் கொண்டு அச்செயலை தடுக்க முற்பட்டார்.

முனிவர்களே! சர்வங்களை படைத்த சர்வேஸ்வரராக இருக்கும் சிவபெருமானுக்கு மாமிசம் வைத்து படைத்தல் என்பது உசிதமான செயல் அன்று. ஏனெனில், அவர் மலர்களால் மட்டும் மகிழ்ச்சி அடையக்கூடியவர் என்று பார்வதி தேவி கூறினார்.

முனிவர்களில் இருந்த வயோதிக முனிவர், தேவி தாங்கள் இன்னும் சிவபெருமானை உணரவில்லை என்றே தோன்றுகிறது என்றார். இதை கேட்டதும் கோபம் கொண்டாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவ்விதம் இல்லையே என்று கூறினார்.

மேலும் தாங்கள் உணர்ந்த சிவபெருமானை என்னாலும் அறிய இயலும் என்று கூறினார். அதற்கு அந்த வயோதிக முதியவர் எம்பெருமானான சிவபெருமான் இவ்வுலகை படைத்தவர். இவ்வுலக உயிர்களில் யாவற்றிலும் சிவபெருமான் அருளும் வாழ்த்தும் பரிபூரணமாக நிறைந்துள்ளது. அது நீங்கள் படைக்கும் மலராக இருந்தாலும் எங்கள் சக்திக்கு கிடைத்த எங்களால் படைக்கும் இந்த மாமிசத்திலும் இறைவன் பரிபூரணமாக பரவசம் அடையக்கூடியவர் என்றனர்.


Share this valuable content with your friends


Tags

காகத்தை கனவில் கண்டால் என்ன பலன்? daily horoscope 14.04.2020 in pdf format february 12 history HOUSE ஒட்டகத்தை கனவில் கண்டால் என்ன பலன்? நான் காவி நிற உடை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 10ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? சோபகிருது வருடம் imporamts days சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் பிப்ரவரி 17 வளர்பிறை சஷ்டி குலதெய்வ சாமி வந்து குழந்தையை என் கையில் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 15.04.2020 rasipalan in pdf format வீட்டில் எத்தனை காமாட்சி விளக்கு ஏற்றலாம்? வாஸ்துவும் நிரந்தர பணவரவும் !! கடல் அலையில் சிக்கிக்கொண்டு எதிரி என்னை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உங்கள் லக்னத்திற்கு ... எந்த ராசிக்கல் அணிய வேண்டும்?... என்பதில் சந்தேகமா? 2018 world