வாஸ்து சாஸ்திரப்படி வடமேற்கு பகுதியின் கட்டிட அமைப்பில் நல்ல அமைப்புகளையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகளையும் பற்றி பார்ப்போம்.
வடமேற்கின் நல்ல அமைப்புகள் :
1. வடமேற்கு முழுவதும் காம்பவுண்ட் அமைப்பு.
2. வடமேற்கில் வீட்டின் வெளிப்பகுதியில் கழிவுநீர் தொட்டியுள்ள அமைப்பு.
3. வீட்டிற்குள் வடமேற்கு பகுதியில் குளியலறை, கழிவறை அமைப்பு.
4. வீட்டிற்கு வெளிப்பகுதியில் கிழக்கு, மேற்கு பார்த்தாற்போல் குளியலறை, கழிவறை அமைப்புகள்.
5. வடமேற்கு அறை குழந்தைகள் படிக்கும் அறையாக இருப்பது.
6. வடமேற்கு அறையை விருந்தினர் அறையாக பயன்படுத்துவது.
7. வடமேற்கில் வெளிப்புறத்தில் கேட்டில் உள் மூலையில் படி அமைப்பு.
8. வடமேற்கில் கார் செட் போடுவது.
9. வடமேற்கில் மாட்டுத்தொழுவம், நாய் கூண்டு அமைப்பது.
10. வீட்டுடன் சேர்க்காமல் குடோன் போன்ற அமைப்புகள் வைத்திருப்பது.
11. வடமேற்கில் பகுதி வெட்டுப்படாமல் சதுரமாக இருப்பது.
பயன்கள் :
1. சிறந்த கலைநயமிக்க வேலையில் இருப்பார்கள்.
2. மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார்கள்.
3. நாணயம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
4. பிரபலமானவர்களாக இருப்பார்கள்.
5. இறைபக்தியுடன் கூடிய செயல்கள் செய்பவர்களாக இருப்பார்கள்.
6. விளையாட்டு துறையில் நிறைய பரிசு பெறுபவர்களாக இருப்பார்கள்.
7. நாய், பசுமாடு, பூனை போன்ற விலங்குகளை வளர்ப்பவர்களாக இருப்பார்கள்.
8. மிகப்பெரிய செல்வந்தர்களாக இருப்பார்கள்.
9. சிறந்த அரசியல்வாதிகளாக இருப்பார்கள்.
10. Transport தொழில் புரிபவர்களாக இருப்பார்கள்.