No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்றால் என்ன?

Jun 28, 2018   Dharani   672    ஆன்மிகம் 

👉 தினமும் காலண்டர் பார்ப்பவர்கள் கண்களில் கீழ்நோக்கு நாள், மேல்நோக்கு நாள், சமநோக்கு நாள் நிச்சயம்படும். கீழ்நோக்கு நாள், மேல்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்றால் என்ன? அன்றைய நாளில் நாம் என்னென்ன செய்தால் சிறப்பாக இருக்கும்?

👉 நட்சத்திரங்களின் அடிப்படையில் இந்நாள் மேல்நோக்கு நாள், இந்நாள் கீழ்நோக்கு நாள் என நாம் அறிகிறோம்.

மேல்நோக்கு நாள் :

👉 உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

👉 இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. அதாவது கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது போன்று மேல்நோக்கி வரக்கூடிய வேலைகளை செய்யலாம்.

கீழ்நோக்கு நாள் :

👉 கிருத்திகை, பரணி, பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

👉 இந்த நாட்களில் கீழ் நோக்கி செய்யும் வேலைகளை துவங்குவது சிறந்தது. அதாவது கிணறு தோண்ட ஆரம்பிப்பது, போர் போடுவது, சுரங்கம் தோண்டுவது என கீழ் வரக்கூடிய பணிகளை செய்யலாம்.

சமநோக்கு நாள் :

👉 அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருகசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

👉 இந்த நாட்களில் சமமாக செய்யும் வேலைகளை துவங்குவது சிறந்தது. அதாவது சாலை அமைப்பது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்ற வேலைகளை செய்யலாம்.


Share this valuable content with your friends