No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்து தவறால் சர்க்கரை வியாதி வருமா?

Jun 26, 2018   Dharani   503    வாஸ்து 

இன்றைய வாழ்க்கை முறையில் நமது உடலமைப்பானது மிக பெரிய பொக்கிஷம் அதை சரியாக பேணி பாதுகாக்காமல் விட்டுவிட்டால், அதேபோல் தொந்தரவு கொடுக்கக்கூடிய விஷயம் உலகில் எதுவும் இல்லை. ஒருவர் மிகப் பெரிய நோய் வந்த நிலைக்கு ஆளானால் அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை கேட்க முடியாத அளவிற்கு புலம்புவதை பார்த்திருப்பார்கள்.

ஒரு குடும்பத்தில் பரம்பரையாக சர்க்கரை வியாதி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மரபு வழிகள் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதாவது எனது தாத்தாவுக்கு சர்க்கரை வியாதி இருந்தது. பிறகு என்னுடைய அப்பாவுக்கு இந்த வியாதி வந்தது. இப்போது எனக்கு இந்த சர்க்கரை வியாதி வந்திருக்கிறது என்று உங்களுடைய நண்பர்கள் சொல்ல கேட்டிருப்பீர்கள். அதையும் ஒரு பெருமையாக கூறுவார்கள். இது எங்களுடைய குடும்ப வியாதி சார் என்பார்கள்.

இன்னும் சில பேர் நான் இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் எனக்கு சர்க்கரை வியாதி வந்தது. முன்பு இருந்த வீட்டில் இருக்கும்போது நன்றாக தான் இருந்தேன் என்று கூறும் நபர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதேபோல் பெண்களுக்கும் திடீரென்று வயிற்றுவலி என்று கூறி ஹாஸ்பிட்டல் போவார்கள். அங்கு போன பிறகு எல்லா (test) மருத்துவ பரிசோதனையும் முடிந்து, கடைசியில் உங்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை நீங்கள் இந்தப் பிரச்சனையை வைத்துக் கொண்டு எப்படி இவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் என்று டாக்டர்கள் சொல்வார்கள். நீங்கள் நிறைய இடங்களில் இதை கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது உங்களுக்கே கூட நடந்திருக்கலாம்.

அதேபோல் நாங்கள் வீடு கட்டி 6 மாதங்கள் கூட ஆகவில்லை. என்னுடைய அப்பா திடீரென்று இறந்துவிட்டார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை சார், என்றும் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபோல பெண்களுக்கு குறிப்பிடும்படியான இன்னும் சில வியாதிகளான

1. கருச்சிதை

2. குறை பிரசவம்

3. குழந்தை பிறப்பு தள்ளி போடுதல்

4. பெண்களுக்கு சர்க்கரை வியாதி

5. பெண்கள் திடீர் மரணம்

6. பெண்கள் மட்டும் விபத்தில் சிக்கி கொள்ளுதல்

7. நகை திருடு போதல்

8. பெண்கள் மட்டும் தீ விபத்தில் சிக்கி கொள்ளுதல்

9. இரத்த புற்றுநோய் வருதல்

இதுபோல குறிப்பிடும்படியான பல நோய்கள் வர காரணம் உங்க வீட்டு வாஸ்து அமைப்பே காரணம்.

வீட்டின் தவறான அமைப்புகள் :

1. தென்கிழக்கு பகுதியில் வரக்கூடிய தவறான படி அமைப்புகளான, உள்மூலை படி அமைப்பு, வெளிப்புறத்தில் மூடிய படி அமைப்பு, நீச்சத்தில் படி அமைப்பு.

2. தென் கிழக்கு மாஸ்டர் பெட்ரூம்.

3. தென் கிழக்கு பாத்ரூம், கழிவறை.

4. தென் கிழக்கில் கழிவுநீர் தொட்டி.

5. தென் கிழக்கில் கிணறு, போர், சம்பு போன்ற அமைப்புகள்.

6. தென் கிழக்கு பகுதியில் வீட்டிற்கு மேல் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பு.

7. தென் கிழக்கு தெற்கு தெருகுத்து, தெரு பார்வை போன்ற அமைப்புகள்.

8. வீட்டிற்கு தெற்கு பகுதியில் ஊருக்கு பொதுவான வாட்டர் டேங், குளம், குட்டை, ஓடை, ஆறு போன்ற நீர் நிலைகள் வருவது.

9. நமது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டின் கழிவறைகள், கிணறுகள் நமது வீட்டின் தெற்கு பகுதியில் வருவது.

10. தென் கிழக்கு முழுவதும் மூடி, அல்லது வளர்ந்த அமைப்பில் கட்டிடங்களை கட்டி கொள்வது.

11. தென் கிழக்கு பகுதியில் வளர்க்கக்கூடாத மரங்களில் முதலில் வாழை மரம் வளர்ப்பது ஆகும்.


Share this valuable content with your friends