🏠 ஒரு மனிதனின் நேர்மையை தீர்மானிப்பதும், மனநிலையை தீர்மானிப்பதும் நமது வீட்டின் வடமேற்கு பகுதி. இந்த பகுதியை வாயு மூலை என்றும் கூறுவார்கள். அறிவார்ந்த பல விஷயங்களை கற்றுக்கொள்ளவும் கலைநயம் மிக்க வேலைகளை கற்றுக் கொள்ளவும், வெளி உலக தொடர்பை மிக பெரியதாக அமைத்துக்கொள்ள உதவுவதும் இந்த வடமேற்கு பகுதிதான்.
🏠 பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலைக்கும், அதே பொருளாதாரத்தில் மிக மோசமான நிலைக்கும் இட்டு செல்வது இந்த வடமேற்கு பகுதிதான்.
🏠 அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வடமேற்கு பகுதியை எவ்வாறு அமைத்து கொண்டால் நமக்கு நன்மை விளைவிக்கும். தவறாக அமைத்தால் தீமை விளைவிக்கும் என்பதை பற்றிப் பார்ப்போம்.
வடமேற்கு பகுதி அமைப்பு :
1. கழிவறைகள் வரலாம்.
2. பூஜை அறைகள் வரலாம்.
3. சமையல் அறைகள் வரலாம்.
4. உறவினர்கள் தங்கும் அறைகள் வரலாம்.
5. குழந்தைகள் தங்கும் அறைகள் வரலாம்.
6. ஹால் வரலாம் (Hall).
வரக்கூடாதவைகள் :
1. மாஸ்டர் பெட்ரூம் (Master Bed Room)
2. உள்மூலை படிக்கட்டு
3. High Ceiling & Low Ceiling
4. தண்ணீர் தொட்டி அமைப்பு
5. கார் பார்க்கிங்
🏠 இதுபோல பல தவறான அமைப்புகள் உண்டு. அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணர்களின் உதவியால் சரியாக அமைத்துக் கொள்வது நல்லது.