No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தென்மேற்கு பகுதியை எப்படி அமைத்தால் சிறப்பை தரும்?

Jun 26, 2018   Dharani   524    வாஸ்து 

🏠 நாம் குடியிருக்கும் மொத்த வீட்டு அமைப்பில் தென்மேற்கு என்பதை கன்னி மூலை என்றும், குபேர மூலை என்றும் பல பெயர்களில் பல ஊர்களில் குறிப்பிடுகிறார்கள். இந்த தென்மேற்கு பகுதி முழுவதும் ஆண் மகனுக்கு சொந்தமான இடம். ஒரு ஆண்மகனை அல்லது அந்த வீட்டின் கணவனை மனிதனாக மதிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்துவதே இந்த தென்மேற்கு பகுதிதான். உத்யோகம்தான் புருஷலட்சணம் என்போம். அப்படி சிறப்பை கொடுப்பதும், பெயர் புகழைக் கொடுப்பதும், குழந்தை பாக்கியத்தை கொடுப்பதும், பெயர் புகழை கொடுப்பதும் இந்த தென்மேற்கின் தன்மையே.

இவ்வளவு தன்மை வாய்ந்த இந்த இடத்தை எப்படி பயன்படுத்துவது அல்லது எப்படி வைத்துக் கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.

1. மொத்த வீட்டு அமைப்பில் தென்மேற்கு பகுதி எப்பொழுதும் மாஸ்டர் பெட்ரூமாக இருப்பது சிறப்பு.

2. மொத்த கட்டிட அமைப்பு எப்பொழுதுமே சதுரம் அல்லது செவ்வகமாக இருப்பது.

3. மொத்த இடத்தில் தென்மேற்கு பகுதியில் எந்த ஒரு காலியிடமும் வரக்கூடாது. அதாவது வாசல் வரக்கூடாது.

4. மொத்த இடத்தில் தென்மேற்கு பகுதி வளைந்த நெலிந்த அமைப்பில் கட்டிடங்கள் இருக்கக்கூடாது.

5. தென்மேற்கில் பூஜை அறை கூடாது.

6. தென்மேற்கில் சமையலறை கூடாது.

7. தென்மேற்கில் கார்பார்க்கிங், போர்டிகோ அமைப்பு கூடாது.

8. தென்மேற்கு டாய்லெட், பாத்ரூம் அமைப்பு கூடாது.

9. தென்மேற்கு உள்மூலை படி அமைப்பு கூடாது.

10. தென்மேற்கு பெட்ரூமை இளம் தம்பதியினருக்கு கொடுப்பது சிறப்பை தரும்.

11. தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூமை குடும்ப உறுப்பினர்களை தவிர மூன்றாவது நபர்களை தங்க வைத்தால், அந்த வீட்டில் பல குழப்பங்கள் வந்து சேரும்.

12. தென்மேற்கு பகுதியே ஒரு வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அந்த பகுதி எப்பொழுதுமே மூடிய அமைப்பில் இருப்பது சிறப்பு.

🏠 நமது வாழ்வில் ஆயுளை தீர்மானிப்பதும், பொருளாதாரத்தை தீர்மானிப்பதும் வீட்டு அமைப்பே என்பதை யாவரும் அறிந்த உண்மையே. அப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த வீட்டை உருவாக்கும்போதோ அல்லது புதுப்பிக்கும்போதோ அல்லது மாற்றி அமைக்கும்போதோ சிறந்த வாஸ்து நிபுணரின் உதவியை கேட்டு செய்வது மேலும் சிறப்பை தரும்.

🏠 ஒரு கட்டிடத்தை தவறாக கட்டிவிட்டால் அது தனக்கு உண்டான தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கும். அதை புரிந்து கொண்டு அந்த தவறான அமைப்பை சரி செய்வதே சிறப்பை தரும். அதை தவிர்த்து பரிகாரம் எவ்வளவு செய்தாலும் பலன் தராது.


Share this valuable content with your friends


Tags

Maaṣha rasi palaṉkaḷ.! பாவலரேறு பெருஞ்சித்திரனார் சரபோஜி வடகிழக்கு பகுதியில் கழிவறை வரலாமா? பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குரங்கு என் மேல் குதிப்பது போல் கனவு கண்டால் பலன்? ஐயப்பன் கோவிலில் இந்த சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது ஏன்? 03.06.2019 Rasipalan in PDF format!! . கேது திசை திருமணத்தடையை ஏற்படுத்துமா? 11ம் அதிபதி 8ல் இருந்தால் என்ன பலன்? tharishanam today (04.05.2022) horoscope in pdf format..! தினசரி ராசிபலன்கள் (31.03.2020) லக்னத்திலிருந்து 12ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்? 07.04.2019 Rasipalan in pdf format!! சிம்ம லக்னம் உடைய பெண் april 11 புரட்டாசி மாத ராசிபலன்களுக்கான பரிகாரங்கள் !! வெற்றிலை பாக்கு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமால்